முகப்பு /செய்தி /ஈரோடு / 10 ரூபாய்க்கு அன்லிமிட்டெட் சாப்பாடு.. ஈரோட்டில் பிரபலமாகும் ஹோட்டல்!

10 ரூபாய்க்கு அன்லிமிட்டெட் சாப்பாடு.. ஈரோட்டில் பிரபலமாகும் ஹோட்டல்!

ஈரோடு உணவகம்

ஈரோடு உணவகம்

Erode hotel | இலவச உணவு என்றால் மக்களுக்கு உணவு மீது மதிப்பிருக்காது என்பதால், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Erode, India

ஈரோட்டில் 10 ரூபாய்க்கு அளவில்லாத உணவளிக்கும் உணவகம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

ஈரோட்டில் ஆற்றல் பவுண்டேஷன் எனும் அமைப்பு சார்பில், அதன் நிறுவனர் அசோக் குமார், பள்ளி மாணவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கொரோனா காலத்தில் மக்கள் உணவுக்கு கஷ்டப்பட்டதை நினைவுகூர்ந்து 10 ரூபாய்க்கு காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் உணவு வழங்கும் வகையில் “ஆற்றல் உணவகம் என்ற பெயரில் உணவகத்தை தொடங்கியுள்ளார். ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் தொடங்கப்பட்டுள்ள உணவகத்தில், உணவை வீணாக்க கூடாது என்கிற கண்டிப்புடன் உணவு வழங்கப்படுகிறது.

முதலில் இலவசமாக வழங்கவே திட்டமிட்ட நிலையில், இலவச உணவு என்றால் மக்களுக்கு உணவு மீது மதிப்பிருக்காது என்பதால், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த உணவகத்துக்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து ஈரோட்டின் மற்ற பகுதிகளிலும் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.

செய்தியாளர்: பாபு, ஈரோடு.

First published:

Tags: Erode, Hotel, Local News