ஆன்லைன் ரம்மி விளம்பரம் தொடர்பாக நான் சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபடவில்லை என்றும், சட்டமாக்கிய பிறகு ஏன் நடிக்கப்போகிறேன் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழுக்கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் மீண்டும் பொதுச்செயலாளராக சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், ’7 வது பொதுக்குழுவில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.
ஆன்லைன் தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு என்றும் சட்டத்தை உருவாக்கி சட்டமாக்க வேண்டும் என முதல்வர் அனுப்பியதை நிராகரிக்க கூடாது என்றார். ஆன்லைன் விளையாட்டு விளம்பரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடித்தேன் என சரத்குமார் கூறினார்.
இதில் சரத்குமார் மட்டுமல்ல பலரும் நடித்துள்ளார்கள் என்றும் நான் சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபடவில்லை என்றும் மத்திய மாநில அரசு கடுமையான சட்டத்தை உருவாக்கவேண்டும் என்றும், சட்டமாக்கிய பிறகு சரத்குமார் ஏன் நடிக்கப்போகிறார் என பதிலளித்தார்.
செய்தியாளர்: மா.பாபு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode, Online rummy, Sarathkumar