ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலையிலிருந்து மேற்கே ஏறத்தாழ 15 கிலோ மீட்டர் தூரத்தில் காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றின் வட கரையில் இன்றைய கொடுமணல் அமைந்துள்ளது. சங்க கால அமைப்பின்படி சேர நாட்டின் தலைநகரமான கரூரை மேற்கு கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப்பாதையில் கொடுமணல் அமைந்துள்ளது. சங்க காலத்தில் கொடுமணம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இன்று கொடுமணல் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், பதிற்றுப்பத்தில் 67வது வரியில் “கொடுமணம் பட்ட வினைமான் நன்கலம்” என்ற வரிகளை குறிப்பிட்டுள்ளார் கபிலர். அதே பதிற்றுப்பத்தில் 74வது வரியாக “கொடுமணம்பட்ட வினைமாண் அருங்கலம்” என்ற பாடல் வரி வருகிறது. அரிசில் கிழார் கூறிய இந்த பாடல் வரிகளும் கபிலரின் பாடல் வரிகளும் கொடுமணம் என்ற ஒரு இடத்தைப்பற்றி கூறுகின்றன.
கொடுமணம் என்ற ஊரில் வேலைப்பாடு மிக்க சிறந்த அணிகலன்கள் உருவாக்கப்பட்டதை இந்த வரிகள் கூறிச் சென்றன. ஏட்டோடு வார்த்தையாக, பாட்டோடு எழுத்தாக நூலுக்குள் அடங்கிப்போய் கிடந்த கொடுமணம் இப்போது தமிழ் கலாசாரத்தின் முக்கிய படிக்கல்லாக தோண்டத்தோண்ட ஆச்சரியம் தரும் கொடுமணலாக மாறி இருக்கிறது. சங்க இலக்கியத்தில் கொடுமணம் என்று குறிப்பிடப்பட்ட இடம்தான் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை ஒன்றியத்துக்குள்பட்ட கொடுமணல் கிராமம். இந்த 2 ஊர்களும் ஒன்றே என்று கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு ஆதாரங்களுடன் கூறுகிறார்.
கொடுமணல் பகுதியில் கடந்த ஆண்டு வரை பலமுறை அகழ்வராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் இங்கு பழங்கால மக்கள் பயன்படுத்தி வந்த மண்பாண்டங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாழி போன்றவையும் கிடைத்துள்ளன. இந்த ஆய்வில் 50 ஹெக்டேர் பரப்பளவில் நகரமும், 10 ஹெக்டேர் பரப்பளவில் மக்கள் வசித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. 4 ஈமக்குழிகள் மற்றும் அவைகளில் இரு அறைகள் கொண்ட கல்லறைகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு இரும்பு ஆலை செயல்பட்டு வந்ததற்கான அடையாளங்களும் இருந்துள்ளன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், மனித எலும்புக்கூட்டின் எலும்புகளும் கிடைத்துள்ளதாக தகவல் வட்டாரம் கூறப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த இடம் தற்போது புதர்செடிகள் அண்டி பாதுகாப்பின்றி கிடக்கிறது. அரசின் வரலாற்று சின்னம் என்ற பதாகை மட்டுமே ஒரே அடையாளமாக இருந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode, Local News