முகப்பு /செய்தி /ஈரோடு / 10 ரூபாய்தான் கட்டணம்... 18 வகையான நோய்களுக்கு தீர்வு... ஈரோட்டில் இப்படி ஒரு மருத்துவமனையா..!

10 ரூபாய்தான் கட்டணம்... 18 வகையான நோய்களுக்கு தீர்வு... ஈரோட்டில் இப்படி ஒரு மருத்துவமனையா..!

ஈரோடு மருத்துவமனை

ஈரோடு மருத்துவமனை

10 Rupees Hospital : ஈரோட்டில் தனியார் அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 18 வகையான நோய்களுக்கு 10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சையுடன் 5 நாட்களுக்கான தேவையான  மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு மரப்பாலம், கள்ளுகடைமேடு, ஜீவானந்தம் நகர் போன்ற   கூலித்தொழிலாளிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் பல்வேறு நோய்களால் அவுதியுற்று வந்தனர். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வந்தாலும் ஒரு நாள் வேலைக்கு விடுப்பு எடுக்க வேண்டி இருப்பதால் உரிய சிகிச்சை பெறாமல் இருந்து வந்தனர்.

இதனையடுத்து ஆற்றல் பவுண்டேஷன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஏழை, எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவமனையை திறந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் அசோக்குமார் கூறுகையில், “இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மக்கள் தொடர்பாளர் என பணியாற்றுவார்கள் என்றும், காய்ச்சல், சிறுநீரக பாதை தொற்று நோய், தோல் பிரச்சனைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் நோய்கள்  உள்பட 18 வகையான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிறகு அவர்களுக்கு 5 நாட்களுக்கு தேவையான மருந்து , மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். நோயற்ற சமூகமே சமூக வளர்ச்சிக்கு ஏற்றது என்ற நோக்கத்துடன் இந்த மருத்துவமனையை தொடங்கி உள்ளோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து இங்கு சிகிச்சை பெற வந்தவர்கள் தெரிவித்தபோது, “ஒரு டீயின் விலை 15 ரூபாய். தனியார் மருத்துவமனைக்கு நோய்களுக்கு சிகிச்சைக்காக சென்றால் குறைந்தபட்சம் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் தேவைப்படும். 10 ரூபாய்க்கு தரமான சிகிச்சையை  மாத்திரையுடன் தருவது வரவேற்கதக்கது” என்றனர்.

ஈரோடு ஆற்றல் மருத்துவமனை

இதே அறக்கட்டளை சார்பில் சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பித்த 10 ரூபாயில் உணவகத்தால் தினமும் 1500க்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : பாபு - ஈரோடு

First published:

Tags: Erode, Local News