முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'தி கேரளா ஸ்டோரி' படத்தை தடை செய்த மேற்கு வங்கம் - காரணம் என்ன தெரியுமா?

'தி கேரளா ஸ்டோரி' படத்தை தடை செய்த மேற்கு வங்கம் - காரணம் என்ன தெரியுமா?

தி கேரளா ஸ்டோரி

தி கேரளா ஸ்டோரி

முதல் மாநிலமாக தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மேற்கு வங்கம் தடை விதித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 3 நாட்களில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது. கார்டியன்ஸ் ஆஃப் தி காலக்ஸி படத்தின் வசூலை இந்தப் படம் முந்தியது. கார்டியன் ஆஃப் தி காலக்ஸி படம் 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் முதல் போலீஸ் பாதுகாப்புடன் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் இந்தப் படம் திரையிடப்பட்டது. இந்த நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் படத்துக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் நேற்று முதல் இந்தப் படம் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | 'கலைஞர்களுக்கு வயதானால்....' - இளையராஜா குறித்து மனம் திறந்து பேசிய வைரமுத்து

top videos

    இந்த நிலையில் இதுவரை எந்த மாநிலமும் படத்தை தடை செய்யாத நிலையில் மேற்கு வங்கம் மாநிலம் முதன்முதலாக இந்தப் படத்தை தடை செய்வதாக அறிவித்துள்ளது. வெறுப்பு, வன்முறை ஏற்படக்கூடாது என்பதற்காகவும் மாநிலத்தின் அமைதியைக் காக்கவும் இந்தப் படத்துக்கு தடைவிதிப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.

    First published: