முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சாதனைப் படைத்த விஜய் சேதுபதி வெப் சீரிஸ்... இந்தியாவிலேயே முதலிடம் பிடித்தது..!

சாதனைப் படைத்த விஜய் சேதுபதி வெப் சீரிஸ்... இந்தியாவிலேயே முதலிடம் பிடித்தது..!

ஃபார்ஸி

ஃபார்ஸி

விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்த 'ஃபார்ஸி' வலைத்தொடர் இந்தியாவில் அதிகம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட வெப் சீரியல் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பேமிலி மேன் இணையத் தொடரின் மூலம் புகழ்பெற்ற ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கி அமேசான் ஓடிடி தளத்தில்  வெளியான வெப் தொடர், ஃபார்ஸி. கிரைம் த்ரில்லர் தொடரான ஃபார்ஸி, தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்த ஷாஹித் கபூருக்கு திருப்புமுனையாகவும், விஜய் சேதுபதிக்கு டிஜிட்டல் சினிமா உலகின் அறிமுகமாகவும் அமைந்தது.

கள்ளநோட்டு அச்சடிக்கும் ஷாகித் கபூர் கோஷ்டியை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மைக்கேல் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் அனைத்திலும் தனது ஸ்டைலான நடிப்பால் கெத்துக் காட்டி பாலிவுட் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.

ராஷி கண்ணா, ரெஜினா, கே.கே.மேனன், அமோல் பலேகர் உட்படப் பலரும் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர். எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த சீரிஸ் பிப்ரவரி 10-ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஃபார்ஸி வெப் சீரியல் இந்தியாவில் அதிகம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளதாக ஆர்மேக்ஸ் மீடியா (ormax) நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் இதுவரை 3 கோடியே 70 லட்சம் நபர்களால் பார்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : நீ தான் பெஸ்ட் - சாயிஷாவின் பத்து தல பாடல் குறித்து ஆர்யா கமெண்ட்

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே, அனைவரது அன்புக்கும் நன்றி என்று கூறியுள்ளனர். கத்ரீனா கைஃப் உடன் மெர்ரி கிறிஸ்துமஸ், ஷாருக்கானுக்கு வில்லனாக அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வரும் நிலையில், ஃபார்ஸி படத்திற்கான இந்த வரவேற்பு, பாலிவுட்டில் விஜய் சேதுபதிக்கு எனத் தனி இடத்தை பதிவு செய்வதற்கான அச்சாரமாகப் பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Vijay Sethupathi, Bollywood, Web series