முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகையான வீரப்பன் மகள்.. மதுவுக்கு எதிரான திரைப்படத்தில் அறிமுகம்!

நடிகையான வீரப்பன் மகள்.. மதுவுக்கு எதிரான திரைப்படத்தில் அறிமுகம்!

மாவீரன் பிள்ளை

மாவீரன் பிள்ளை

Maaveeran Pillai : மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு படமாக உருவாகி வரும் இப்படத்தை கேஎன் ஆர் ராஜா இயக்கி அவரே நாயகனாகவும் நடித்து வருகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாவீரன் பிள்ளை என்ற திரைப்படம் மூலம் மறைந்த சந்தன கடத்தல் வீரப்பன் மகள் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். வீரப்பன் மகளான விஜயலட்சுமி, இப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ராதாரவியும் நடித்து வருகிறார். மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு படமாக உருவாகி வரும் இப்படத்தை கேஎன் ஆர் ராஜா இயக்கி அவரே நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இப்படம் குறித்து பேசிய விஜயலட்சுமி, ''சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டுமென ஆர்வம் இருந்தது. சமூகத்தை ஒரு பக்கம் குடியும், மறுபக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என கருதினேன்.அதனால்தான் இப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன். என் அப்பாவின் பெயருக்கு களங்கம் வராமல் காப்பாற்றுவேன் என்றார்.

top videos

    இது குறித்து பேசிய இயக்குநர், சினிமாவில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். வீரப்பன் மகள் விஜயலட்சுமியை ஒரு புதுமுக நடிகையாக ஆதரிக்க வேண்டும் என்றார்.

    First published:

    Tags: Tamil Cinema