தி கேரளா ஸ்டோரி படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அதில் நடித்த நடிகையான ஆதா ஷர்மா ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கினார். கேரள ஸ்டோரிக்கு படத்துக்கு எதிர்ப்பு கிளப்பு வரும் நிலையில் நடிகை விபத்தில் சிக்கிய விவகாரம் இணையத்தில் தீயாய் பரவியது.
சுதிப்தோ சென் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 5 ஆம் தேதி வெளியாகியது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு சட்ட சிக்கல்களை சந்தித்து நீதிமன்றம் படியேறி இந்தப்படத்தை திரைக்கு கொண்டு வந்தனர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்துக்கு உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் இந்தியில் வெளியானது.
I'm fine guys . Getting a lot of messages because of the news circulating about our accident. The whole team ,all of us are fine, nothing serious , nothing major but thank you for the concern ❤️❤️
— Adah Sharma (@adah_sharma) May 14, 2023
தி கேரளா ஸ்டோரி படக்குழுவுக்கு மிரட்டல்கள் வந்த நிலையில் நடிகை ஆதா ஷர்மா விபத்தில் சிக்கியது பேசுப்பொருளானது. இந்த விவகாரத்தை உடனே அறிந்த நடிகை தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்து குறித்து பதிவிட்டார். அதில் “நான் நன்றாக தான் இருக்கிறேன். விபத்து குறித்து தகவல் பரவியதும் எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்தது. எங்கள் படக்குழுவில் அனைவரும் நன்றாக இருக்கிறோம். ஒன்றும் பிரச்னையில்லை. பெரிய விபத்து எதுவும் இல்லை. நீங்கள் என் மீது கொண்ட அக்கறைக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment, Kerala