முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ராமிடம் மகாலட்சுமியின் திட்டத்தை உடைத்த துரை - சீதா ராமன் சீரியல் அப்டேட்!

ராமிடம் மகாலட்சுமியின் திட்டத்தை உடைத்த துரை - சீதா ராமன் சீரியல் அப்டேட்!

சீதா ராமன் சீரியல்

சீதா ராமன் சீரியல்

ராமிடம் மகாலட்சுமியின் திட்டத்தை உடைத்த துரை, அடுத்து நடக்க போவது என்ன என சீதா ராமன் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகாலட்சுமிக்கு அடிபடவே ராம், சீதாவின் முதலிரவு நின்று அவர்கள் வீட்டுக்கு வந்த நிலையில் சீதாவுக்கு மகாலட்சுமி மீது சந்தேகம் வருகிறது.

அடுத்து சுபாஷ் சரக்கு அடித்து கொண்டிருக்கம் போது அங்கு வரும் ராமின் மாமா துரை மகாலட்சுமி சொல்லறதை கேட்டுட்டு இப்படி பண்றீங்களே, இது சரி கிடையாது, நான் எல்லா உண்மைகளையும் சீதா மற்றும் ராமிடம் சொல்ல போவதாக சொல்கிறான்.

அந்த நேரத்தில் ராமும் அங்கு வர துரை விஷயத்தை சொல்ல சுபாஷ் அவர் குடிபோதையில் உளறுவதாக சொல்கிறான். ராம் போனதும் துரை நாளைக்கு நான் குடிக்காமல் இருக்கும் போது ராமிடம் உண்மையை சொல்லுவேன் என சொல்கிறார்.

பிறகு சீதா ராம் உயிருக்கு ஆபத்து என்பது போல கெட்ட கனவு கண்டு அலறி எழுகிறாள். இதனால் சீதாவுக்கும் பயம் வருகிறது. அடுத்து மறுநாள் காலையில் மகாலட்சுமி ராமை அழைத்து உனக்கேத்த பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்பட்டேன், ஆனால் அது நடக்கல. சீதா எனக்கேத்த மருமகளா இருக்க மாட்டா ஆனால் அவ நல்ல பொண்ணு என சொல்ல சீதா சந்தோஷப்படுகிறாள்.

ஆனால் மகாலட்சுமி மைண்ட் வாய்ஸில் இருடி உனக்கு ஆப்பு வைக்கிறேன் என பேசுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv