முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மகாலட்சுமியால் மன்னிப்பு கேட்ட சீதா - சீதாராமன் சீரியல் அப்டேட்!

மகாலட்சுமியால் மன்னிப்பு கேட்ட சீதா - சீதாராமன் சீரியல் அப்டேட்!

சீதாராமன் சீரியல்

சீதாராமன் சீரியல்

மகாலட்சுமி போட்ட திட்டத்தல் மன்னிப்பு கேட்ட சீதா என சீதாராமன் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சீதா மகாலட்சுமியின் தோழியை நக்கல் அடித்து அனுப்பிய நிலையில் சுபாஷ் மற்றும் சேதுபதி என இருவரும் ராமிடம் சென்று கோபப்படுகின்றனர். ஒழுங்காக சீதாவை மகாலட்சுமியிடம் சென்று மன்னிப்பு கேட்க சொல் என சொல்ல ராம் சரி நான் சீதாவிடம் பேசுகிறேன் என சொல்கிறான்.

ராம் மகாலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க்குமாறு சீதாவிடம் பேச முதலில் மறுத்து ராமை கலாய்க்கும் சீதா கடைசியில் ராமுக்காக மன்னிப்பு கேட்க முடிவெடுக்கிறாள். மறுபக்கம் மகாலட்சுமி சீதாவின் மீது இருக்கும் கோபத்தில் கூடிய சீக்கிரம் மதுவை இந்த வீட்டுக்கு கூட்டி வருகிறேன், அவள இந்த வீட்டோட மருமகளாக ஆக்குகிறேன் என சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

இந்த நேரத்தில் அங்கு வரும் சீதா மகாலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க பிறகு மகாலட்சுமி கூடிய சீக்கிரம் உனக்கும் ராமுக்கும் ரிசப்ஷன் நடத்தப் போகிறேன், நீ தான் இந்த வீட்டோட மருமக என எல்லோரிடமும் சொல்ல போகிறேன் என சொல்ல அனைவரும் ஷாக்காக சீதா மகாலட்சுமியின் திட்டம் என்ன என்று தெரியாமல் சந்தோஷப்படுகிறாள்.

ரிசப்ஷன் நடக்கப் போகும் விஷயத்தை தன்னுடைய அப்பா அம்மாவுக்கு சொல்லி அவர்களையும் வர வைக்க முடிவெடுக்கிறாள் சீதா. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv