முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கைதாகும் சீதா? ராம் எடுக்கும் முடிவு என்ன? - சீதாராமன் சீரியல் அப்டேட்

கைதாகும் சீதா? ராம் எடுக்கும் முடிவு என்ன? - சீதாராமன் சீரியல் அப்டேட்

சீதாராமன் சீரியல்

சீதாராமன் சீரியல்

கைதாகும் சீதா, ராம் எடுக்கும் முடிவு என்ன என சீதாராமன் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சீதாராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சூர்யா சீதா கொண்டு வந்த பேக்கில் தான் கஞ்சா இருந்ததாக சொல்ல அதைக் கேட்டு ராம், மதுமிதா அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது மகாலட்சுமியின் வீட்டுக்கு வரும் ராஜசேகர் மகாலட்சுமியிடம் சத்தம் போட அவள் சீதா எல்லாத்தையும் சொல்லிட்டாளா அதுவும் நல்லதுக்கு தான் என ஆவேசமாக பேசுகிறாள்.

மேலும் முதல்ல தப்பு பண்ணது நீங்கதான், நாங்க மதுமிதாவை பொண்ணு கேட்டு தான் வந்தோம் ஆனா நீங்க எங்களை ஏமாற்றி சீதாவை கட்டி வச்சுட்டீங்க என சத்தம் போடுகிறாள். சீதா இனிமேல் நீ இங்க இருக்க வேணாம் இவங்க எல்லாரும் கெட்டவங்க என சொல்லி வீட்டுக்கு அழைக்க சீதா வர மறுக்கிறாள்.

பிறகு ராஜசேகர் சீதா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை, உங்களால எதுவும் செய்ய முடியாது என சவால் விட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்ப எதிரில் ராம் மற்றும் மதுமிதா வருகின்றனர். ராஜசேகர் திரும்பவும் மதுமிதாவிடம் தன்னுடன் வந்துவிடுமாறு சொல்ல அவள் பயங்கரமாக கோபப்படுகிறாள்.

நீங்க சொன்னா மாதிரியே சீதா மூலமாக கஞ்சாவை வச்சு அவர ஜெயில்ல போட்டுட்டீங்க என கோபப்பட ராஜசேகர் அதிர்ச்சி அடைகிறார். சீதா கொண்டு வந்த பையில் தான் கஞ்சா இருந்ததாக சூர்யா சொன்னதாக ராம் சொல்ல அது சீதா வச்சது கிடையாது, உங்க சித்தி மகா வச்சது என சொல்ல ராம் கோபப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறான்.

அதே கோபத்தோடு வீட்டுக்கு வரும் ராம் சீதாவுடன் பேசிக் கொண்டிருக்கும் மீராவை வெளியே அனுப்பிவிட்டு அவளிடம் கோபத்தைக் காட்டி ரூமில் இருக்கும் பொருட்களை எடுத்து உடைக்கிறான்.

Also read... ஹேப்பி நியூஸ் சொன்ன நடிகை அஞ்சலி.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!

இதனால் இன்னும் உடைந்து போகும் சீதா நான் அப்படி செஞ்சி இருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா பாஸ்? நானே எப்படி என் அக்கா வாழ்க்கையை கெடுப்பேன்? உங்களுக்கு நான் தான் செய்தேனு சந்தேகம் இருந்தால் என்னை போலீஸ்ல பிடிச்சு கொடுங்க என சீதா அழுது புலம்புகிறாள்.

பிறகு ராம் கோபமாக மகாவிடம் சென்று போலீசை கூப்பிட சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv