முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பரபரப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் ரஜினி சீரியல் அப்டேட்!

பரபரப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் ரஜினி சீரியல் அப்டேட்!

ரஜினி சீரியல்

ரஜினி சீரியல்

இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் ரஜினி சீரியலில் அடுத்து நடக்கப் போவது என்ன என சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரஜினி. இந்த சீரியலில் கடந்த வாரம் மாரிமுத்து ரஜினியை காப்பாற்ற கத்தி குத்து வாங்கிய நிலையில் ரஜினி அவரை மருத்துவமனையில் அனுமதித்து அப்பா என கூப்பிட்டு சந்தோஷப்பட வைத்தாள்.

இந்த நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது, மாரிமுத்து ரஜினியிடம் அனைவரின் முன்னால் மன்னிப்பு கேட்க, ரஜினி முடியாது என சொல்லி மறுக்கிறாள். குடும்பத்தினர்கள் அனைவரும் ரஜினியை திட்டுகிறார்கள்.

அடுத்து தன் மேல் இருக்கும் கோபத்தினால் தான் குடும்பத்தினர்கள் பொறுப்பாக இருக்கிறார்கள். அவர்கள் முன்னால் நான் சொல்லும்படி நடந்து கொள்ளுங்கள் ரஜினி மாரிமுத்துவிடம் சத்தியம் வாங்கியது ப்ளாஷ் பேக்கில் தெரிய வருகிறது.

இதனை தொடர்ந்து ரஜினி, பார்த்திபனுக்காக குபேரன், அரவிந்த் இருவரும் farewell ரெடி செய்கிறார்கள். ரஜினியை பற்றி தவறாக பேச வேண்டும் என நினைத்து, குடும்பத்தினர்கள் அனைவரும் ரஜினியை பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள். பிறகு ரஜினி, பார்த்திபன் இருவரையும் அனிதா கோவிலுக்கு வர வைத்து பார்த்திபனின் அப்பா செய்ய வேண்டும் என நினைத்த வேண்டுதலை செய்ய வைக்கிறாள். ரஜினி, பார்த்திபன் இருவரும் ஜோடியாக வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

அதற்கு அடுத்ததாக பார்த்திபன் ஃபாரீன் போக வேண்டுமா? இல்லையா? என அம்மன் சன்னதியில் ரஞ்சிதம் பூ போட்டு பார்க்கலாம் என சொல்லி பூ போட்டு பார்க்கிறார்கள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? அம்மன் கொடுக்க போகும் முடிவு என்ன பரபரப்பான இறுதி கட்டங்களுடன் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv