ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரங்கநாயகி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட சொல்ல சக்தி டைவர்ஸ் பேப்பரை தூக்கி எறிந்து விட்டு நான் கையெழுத்து போட முடியாது என்று சொல்லி விடுகிறாள்.
மேலும் கூடிய சீக்கிரத்தில் நான் ரங்கநாயகியின் மருமகளாக வெற்றியின் மனைவியாக இதே வீட்டுக்கு வருவேன் என்று சவால் விட்டு வெளியே செல்கிறாள்.
அடுத்து பூஜா சரண்யாவிடம் இது நான் உனக்கு போட்ட ஸ்கெட்ச் ஆனால் சக்தியே வலிய வந்து இதில் மாட்டிக் கொண்டாள். ஆனால் அவளை எப்படியும் வெளியேற்றி விடுவேன் என்று பூஜா சொல்ல ,பூஜாவை திட்டி விட்டு சரண்யா செல்கிறாள்.
பிறகு பூஜா வெற்றி விவாகரத்து பேப்பரில் கையெழுத்துப் போட்ட விஷயத்தை புஷ்பாவிடம் சொல்கிறாள். புஷ்பாவோ கூடிய சீக்கிரம் நீ வெற்றியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு அறிவுரை சொல்கிறாள். இதை மறைந்திருந்து கேட்ட நீதி மணி புஷ்பாவிடம் சக்தி விஷயத்தை பற்றி நீ பேச வேண்டாம் என்று சொல்கிறான்.
அதனைத் தொடர்ந்து ரங்கநாயகியின் வீட்டுக்கு போஸ்ட் மேன் வந்து சக்தியின் ஹால் டிக்கெட்டை கொடுக்க, அதை வாங்கிய பூஜா கிழிக்க முற்படும் போது வெற்றி வந்து பூஜாவை திட்டி அதை வாங்கிக் கொண்டு போகிறான்.
பிறகு பூஜா ரங்கநாயகியிடம் சக்தியின் ஹால்டிக்கெட்டை கொண்டு போய் கொடுப்பதற்காக வெற்றி போகிறான் என்று போட்டுக் கொடுக்க, இன்னும் வெற்றி சக்தியை நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று பூஜா சொல்ல, கவலைப்படாதே அவன் தான் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட்டு விட்டான். கூடிய சீக்கிரம் சக்தியை வெற்றியிடமிருந்து பிரித்து உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று ரங்கநாயகி ஆறுதல் சொல்கிறாள்.
அடுத்து மீனாட்சி வீட்டில் சக்தி வெற்றியை நினைத்துக் கொண்டிருக்க ஹால்டிக்கெட்டுடன் வெற்றி சக்தியின் வீட்டிற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv