முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விவாகரத்து பேப்பரில் வெற்றியிடம் கையெழுத்து வாங்கிய ரங்கநாயகி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

விவாகரத்து பேப்பரில் வெற்றியிடம் கையெழுத்து வாங்கிய ரங்கநாயகி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

விவாகரத்து பேப்பரில் வெற்றியிடம் கையெழுத்து வாங்கிய ரங்கநாயகி... சக்திக்கு காத்திருந்த அதிர்ச்..சி அடுத்து நடக்கப்போவது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட் பரபரப்பாக உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தியை அனைவரும் விசாரிக்க சக்தி எதுவும் சொல்லாமல் இருக்க, மீனாட்சி சக்தியை மன்றாடி கேட்க அப்போதும் சக்தி எதுவும் சொல்லாமல் இருக்கிறாள்.

அடுத்து வெற்றியும் பிடிவாதம் பிடிக்கும் சக்தியை திட்டி விட்டு வெளியேறுகிறான். வெற்றியின் வீட்டில் ரங்கநாயகி வக்கீலை வர வைத்து சக்தி இந்த குடும்பத்திற்கு தேவையில்லை என்று சொல்லி ரங்கநாயகி வெற்றியிடம் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து கேட்கிறாள். வெற்றி போட மறுக்கிறான்.

இதனால் கோபமடைந்த ரங்கநாயகி தன் அறைக்கு சென்று ரிவால்வரை எடுத்து வருகிறாள். நீங்கள் என்னை சுட்டாலும் நான் கையெழுத்து போட மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறான் வெற்றி. கையெழுத்து போடவில்லை என்றால், நான் சுட்டு கொள்வேன் என்று ரங்கநாயகி' கூற வேறு வழியின்றி வெற்றி விவாகரத்துக்கு கையெழுத்து போடுகிறான்.

தன் கர்ப்பத்தால் தான் இந்த பிரச்சனை என்று, சரண்யா அபார்ஷன் செய்ய ஆஸ்பிட்டல் செல்ல, இதை வேலைகாரி சக்திக்கு தெரியப்படுத்துகிறாள். டாக்டர் சரண்யாவுக்கு அபார்ஷன் செய்ய மறுக்க பின் சரண்யா மன்றாடி கேட்டதற்கு இணங்க டாக்டர் ஒப்புக்கொண்டு இன்ஜெக்ஷன் செய்கிறார்.

அப்போது ஆஸ்பத்திரிக்கு வந்த சரண்யாவிடம் டாக்டர் உனக்கு வைட்டமின் இன்ஜெக்ஷன் தான் போட்டு இருக்கிறார் என்றும் அவர் தனக்கு போன் செய்த விஷயத்தையும் சொல்கிறாள்.

பிறகு சரண்யாவிடம் இனி இந்த மாதிரி விபரீதமான முடிவு எடுக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv