முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சாந்தாவால் வெற்றி கல்யாணத்துக்கு வந்த சிக்கல் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

சாந்தாவால் வெற்றி கல்யாணத்துக்கு வந்த சிக்கல் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

வெற்றி கல்யாணத்துக்கு வந்த சிக்கல், ஷாக் கொடுத்த சாந்தா என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரண்யா சக்தியிடம் நீ கர்ப்பமாக இல்லை என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தி விடு என்று சொல்ல சக்தி வாக்குக் கொடுத்தால் கொடுத்தது தான் என்று பிடிவாதமாக இருக்கிறாள்.

பின் ரங்கநாயகி சக்தியை கூப்பிட்டு தாலியை எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வரச் சொல்ல சக்தி தாலியை எல்லோரிடமும் எடுத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறாள்.

பிறகு கல்யாணத்துக்கு வந்திருந்த பெண்கள் சக்தியிடம் இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுங்கள் என்று சொல்கிறார்கள். பூஜா நீ எனக்கு ஆசீர்வாதம் பண்ணு என்று சக்தியிடம் கிண்டலாக சொல்கிறாள். சக்தி அமைதியாக நிற்கிறாள்.

பிறகு ரங்கநாயகி வெற்றியிடம் தாலியை கட்டுமாறு கூற, கெட்டி மேளம் ஒலிக்க வெற்றி தாலியுடன் இருக்க, திடீரென அங்கே வந்த சாந்தா கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று சொல்ல, ரங்கநாயகி நீ யாரு என்று கேட்க சக்தி மெஸ்ஸில் வேலை செய்கிறவர் எனக்கு அக்கா மாதிரி என்று சொல்ல, சாந்தா ரங்கநாயகியிடம் இந்தக் கல்யாணத்தை நிறுத்தி விடுங்கள் இது சக்தியின் வாழ்க்கை என்று ஆவேசமாக சண்டையிட்டு பையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை கையில் எடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

Also read... இஸ்லாம் மதத்திற்கு எதிரானது இல்லை ஃபர்ஹானா படம் - படக்குழு விளக்கம்!

அடுத்து மண்டபத்திற்கு வெளியே நீதிமனி யமுனா துர்காவும் வர அவர்களைப் பார்த்துவிட்டு சங்கிலி இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய் என்று கேட்டு, மீனாட்சி குடும்பத்திற்கு உதவி செய்து இந்த கல்யாணத்தை நிறுத்த வந்தாயா? என்று சங்கிலி நீதிமணியை மிரட்டி கழுத்தை பிடிக்கிறான்.

மேலும் யாரும் மண்டபத்துக்கு உள்ளே போகக்கூடாது என மிரட்டுகிறான். யமுனாவும் துர்காவும் வேறு வழியில் மண்டபத்திற்குள் சென்று கல்யாணத்தை நிறுத்த திட்டமிடுகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv