முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெற்றியை பழிதீர்த்த சக்தி - பரபர கட்டத்தில் 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் அப்டேட்

வெற்றியை பழிதீர்த்த சக்தி - பரபர கட்டத்தில் 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

வெற்றியை கைது செய்த போலீஸ், பழி தீர்த்த சக்தி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் புஷ்பாவும் சங்கிலியும் இன்ஸ்பெக்டரை சந்தித்து வெற்றி மீது கம்ப்ளைன்ட் கொடுத்ததோடு லஞ்சம் கொடுத்து கைது செய்ய சொன்ன நிலையில் இன்ஸ்பெக்டர் வெற்றியை கைது செய்ய முடிவெடுக்கிறார்.

வெற்றி, கிரி, திடியன் மூவரும் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு வீட்டில் எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருக்கும்போது போலீஸ் வந்து வெற்றியை கைது செய்கிறது. சக்தி தான் ஏற்கனவே கொடுத்த கம்ப்ளைன்டில் தான் வெற்றியை கைது செய்கிறீர்களா என கேட்டுவிட்டு தடுக்காமல் விட்டு விடுகிறாள்.

வெற்றி, திடியன், கிரியும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்க, சக்தி எப்படியும் வந்து தன்னை காப்பாற்ற வருவாள் என்று வெற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது சக்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறாள்.

Also read... அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... விடாமுயற்சி படம் குறித்து சூப்பர் அப்டேட் இதோ!

இன்ஸ்பெக்டரிடம். ஐ பி சி செக்சன் எல்லாம் கேட்டு விசாரிக்கிறாள். பின் செக்ஷன் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லுகிறாள் .தன்னை வெளியில் எடுத்து விடுவாள் என நினைத்த வெற்றி கடுப்பாகிறான்.

பின் சக்தி வெற்றிடம் உனக்கு ஒரு மானப் பிரச்சனை என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்று கூறி அவள் கொண்டு வந்த வேட்டி சட்டையை கொடுக்கிறாள், கர்சிப்பை கீழே போடுகிறேன் எடுப்பது போல் என் காலில் விழுந்து மன்னிப்பு கேள் என்று சக்தி சொல்ல வெற்றி மன்னிப்பு கேட்க மறுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv