முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சக்திக்கு வந்த பரிதாப நிலை - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

சக்திக்கு வந்த பரிதாப நிலை - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

சக்திக்கு வந்த பரிதாப நிலை, வெற்றி கல்யாணத்தில் என்ன நடக்கும் என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றி கல்யாண கோட் சூட் போட ஒப்புக்கொள்ள மாட்டான் என்று சரண்யா சக்தியிடம் சொல்கிறாள்.

காஸ்டியூமர் வீட்டிற்கு வர வெற்றி பூஜாவின் டிரஸ்ஸுக்கு மேட்ச்சாக கோட் சூட் எல்லாம் செலக்ட் செய்ய இதை பார்த்து சக்தி வருத்தம் அடைகிறாள். அடுத்ததாக சக்தி சாமி கும்பிட்டு அவளின் இக்கட்டான சூழ்நிலையை சாமியிடம் சொல்கிறாள். பிறகு அனைவரும் ரிசப்ஷனுக்கு கிளம்ப தயாராக இருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் பூஜா சக்தியிடம் இன்று தான் நீ இந்த வீட்டில் இருக்கும் கடைசி நாள் நன்றாக இந்த வீட்டை சுற்றிப் பார்த்துக் கொள் என்று கிண்டலாக சொல்லிவிட்டு போகிறாள். ரங்கநாயகி சக்தியை தன்னுடன் காரில் வரச் சொல்கிறாள்.மேலும் மனம் மாறி விட்டேன் என்று நினைக்காதே, கல்யாணம் முடியும் வரை நீ என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று ரங்கநாயகி சொல்கிறாள்.

மறுபக்கம் பூஜா தன் தோழிகளிடம் சக்தியை எப்படியாவது இன்சல்ட் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறாள். ரிசப்ஷனுக்கு காரில் பூஜா வந்து இறங்குகிறாள். சக்தி கல்யாணத்தில் நிறைய வேலைகள் செய்கிறாள்.

Also read... 39 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக அமைந்த ரஜினியின் படம்

இதனால் ஊர் மக்கள் சக்தியின் நிலைமை பற்றி பேச இதை கேள்விப்பட்ட செல்வமுருகன் ரங்கநாயகியிடம் சொல்ல, அவள் இதை பொருட்படுத்தவில்லை, வெற்றி நண்பர்களுடன் காரில் வந்து இறங்குகிறான்.

ரங்கநாயகி வெற்றிக்கு சக்தியை ஆரத்தி எடுக்க சொல்கிறாள். சக்தி வருத்தத்துடன் வெற்றிக்கு ஆரத்தி எடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv