முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / புஷ்பாவுக்கு ஷாக் கொடுத்த வெற்றி - பரபர கட்டத்தில் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்.!

புஷ்பாவுக்கு ஷாக் கொடுத்த வெற்றி - பரபர கட்டத்தில் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்.!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மன்னிப்பு கேட்க போன சக்தி, புஷ்பாவுக்கு ஷாக் கொடுத்த வெற்றி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மன்னிப்பு கேட்க சொன்ன வெற்றியிடம் உதவி கேட்காமல் சக்தி வந்து விடுகிறாள்.

அதன் பிறகு சக்தி, துர்கா, யமுனா, சாந்தா என அனைவரும் இந்த வருடம் பொங்கல் வைக்கிறோம், இந்த பூமியை காப்பாற்றிக் கொடு என்று கல்கோயிலில் வேண்டிக் கொள்கிறார்கள்.

இரவு வீட்டின் முன் மெஸ் நடக்கிறது அடியாட்கள் கிண்டல் செய்கிறார்கள், இதனால் மூன்று பெண்களும் பயந்தப்படி இருக்க, வெற்றி கூட்டத்தை விளக்கிக் கொண்டு உதவி செய்வது போல் வர ரவுடிகள் வெற்றியை பார்த்து பயப்பட, பின் வெற்றி சாதாரணமாக கஸ்டமர் போல் இட்லி வடை கேட்க சக்தி வெற்றியைத் திட்டுகிறாள்

பின்னர் வெற்றி ரவுடிகளிடம் என்ன ஜேசிபி எல்லாம் வந்திருக்கிறது என கிண்டலாக கேட்டுவிட்டு மீண்டும் ஜீப்பில் சென்று உட்கார்ந்து பாட்டு போட்டு சந்தோஷமாக இருக்கிறான். மூன்று பெண்களும் இரவு எல்லாம் தூங்காமல் பயந்தபடி இருக்கிறார்கள்.

காலையில் வெற்றி எழுந்து மீனாட்சி ஹோட்டலில் சாப்பிட்டடு விட்டு மீண்டும் ஜீப்பில் சென்று அமர்ந்து பாட்டு கேட்கிறான். புஷ்பா மற்றும் சங்கிலியும் வந்து பத்து மணிக்கு வீட்டை இடிக்க இருக்கிறோம் என்று ஜேசிபியுடன் தயாராக நிற்க சாந்தா, துர்கா, சக்தி, யமுனா என அனைவரும் கலக்கத்துடன் நின்று கொண்டு பயந்து கொண்டிருக்கிறார்கள்.

Also read... குக் வித் கோமாளி ஆண்ட்ரியனின் ரீசென்ட் க்ளிக்ஸ்!

யமுனாவும் துர்காவும் வெற்றியிடம் உதவி கேட்க சொல்ல சக்தி  அவனிடம் மன்னிப்பு கேட்க செல்லும் தருவாயில் வெற்றி விளையாட்டுக்கு சொன்னேன் மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று சொல்லிவிட்டு ஜே சி பி யின் முன்னாள் வந்த நிற்கிறான்.

புஷ்பா சட்டம் எனக்கு தான் சாதகமாக இருக்கிறது நீ ஒன்றும் செய்ய முடியாது என்று வெற்றியிடம் சொல்ல, வெற்றி உன்னால் வீட்டை இடிக்க முடியாது என்று ஸ்டைலாக ஜேசிபியின் முன்னாள் வழியை மறைத்து நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv