முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பூஜாவின் கழுத்தில் தாலி கட்ட போன வெற்றி - முக்கிய கட்டத்தில் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்!

பூஜாவின் கழுத்தில் தாலி கட்ட போன வெற்றி - முக்கிய கட்டத்தில் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்!

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

பூஜாவின் கழுத்தில் தாலி கட்ட போன வெற்றி, கடைசி நொடியில் அதிரடி ட்விஸ்ட் அடுத்து நடந்தது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி வெற்றிக்கு தெரியாமல் தாலி பிரித்து கட்டும் சடங்கை நடத்த ஒப்புக் கொள்கிறாள். பிறகு வெற்றி தனக்கு இது எதுவுமே தெரியாது என்று சொல்கிறான்.

இதனால் இந்த பிரச்சனையே வேண்டாம், இப்போதே பூஜா கழுத்தில் தாலியை கட்டு என்று ரங்கநாயகி சொல்லி விட, அங்கேயே கல்யாணம் ஏற்பாடுகள் நடக்க, வெற்றி பூஜா கழுத்தில் தாலி கட்ட தயாராகிறான். இதை பார்க்க விருப்பம் இல்லாத சக்தி சாமி முன்னாள் நின்று மிகவும் வருத்தமாக வேண்டுகிறாள்.

ஆனால் வெற்றி தாலி கட்டப் போகும்போது, மயக்கமடையும் பூஜா, திடீரென இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள். இதனால் அனைவரும் அதிர்ச்சி ஆகிறார்கள்.

Also read... பறந்த ஆர்டர்.. அரசியல் களத்திற்கு தயாராகும் விஜய்..? தொகுதி வாரியாக விவரங்கள் சேகரிக்க உத்தரவு!?

சக்தி வேண்டியது பலித்துவிட்டதாக யமுனா துர்கா சந்தோஷமடைய வெற்றி சக்தியிடம் எல்லா நாளும் இப்படி நடக்காது, உண்மையை சொல்லிரு என்று சொல்லிவிட்டுப் போகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv