முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெற்றிக்கு ஆக்சிடென்ட்.. சக்திக்கு வந்த அதிர்ச்சி தகவல் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

வெற்றிக்கு ஆக்சிடென்ட்.. சக்திக்கு வந்த அதிர்ச்சி தகவல் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

வெற்றிக்கு ஆக்சிடென்ட், சக்திக்கு வந்த அதிர்ச்சி தகவல் என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஒரு சித்தர் வந்து வெற்றியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறார். அதையே நினைத்தவாறு சக்தி யோசித்து கொண்டு இருக்கிறாள்.

அடுத்து வெற்றி பைக்கில் வர பின்னாடி ஒரு லாரி வருகிறது. சக்திக்கு சரண்யா போன் செய்து, வெற்றிக்கு ஆக்ஸிடன்ட் ஆனதை சொல்ல, சக்தி வெற்றியை சென்று சந்திக்கிறாள். அதிஷ்டவசமாக வெற்றி பிழைத்ததை யோசித்த சக்தி, சித்தர் சொன்னதை நினைத்தவாறு வீட்டிற்கு செல்கிறாள்.

வீட்டில் சாந்தா தாலி பிரித்து கோர்க்க வேண்டும் என்று சக்தியிடம் கூறுகிறாள். அதனால் தான் இப்படி விபத்து ஏற்பட்டதாக அவள் சொல்கிறாள். அதனை தொடர்ந்து சக்தி கோயிலில் சுமங்கலி பூஜை செய்து தாலி பிரித்து கோர்க்கும் சடங்கை செய்கிறாள்.

இந்த சடங்கின் நிறைவாக வெற்றி வந்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும். வெற்றியை கோவிலுக்கு வரவழைக்க சரண்யா திட்டமிட்டு வேண்டுதல் என பொய் சொல்லி கோவிலுக்கு அழைத்து வருகிறாள். இதை பார்த்த பூஜா பின்னாடியே காரில் பின் தொடர்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv