முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பெண் பார்க்க போன வெற்றிக்கு ஷக்தி வைத்த ட்விஸ்ட் - 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் அப்டேட்

பெண் பார்க்க போன வெற்றிக்கு ஷக்தி வைத்த ட்விஸ்ட் - 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

பெண் பார்க்க போன வெற்றிக்கு ஷக்தி வைத்த ட்விஸ்ட் என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றி அழகான உடை உடுத்தி கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு நண்பர்களுடன் பெண் பார்க்க செல்கிறான். அவனுடன் சக்தியும் வருகிறேன் என்று சொல்ல அவன் வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். ஆனாலும் சக்தி கெஞ்ச சக்தியையும் அழைத்து செல்கிறான்.

அடுத்து கோயிலில் ஒரு அழகான பெண் நின்று கொண்டிருக்க இவள் தான் கல்யாண புரோக்கர் சொன்ன பெண் என்று நினைத்து அவளிடம் பேச செல்ல அவள் கோபமடைந்து தன் கணவனை அழைக்க அந்த பெண்ணின் கணவன் வெற்றியை திட்ட இதை பார்த்த சக்தி சிரிக்கிறாள்.

பிறகு ஐந்தாறு பெண்கள் ஒரு இடத்தில் இருக்க இதை பார்த்து வெற்றி இவர்கள்தான் புரோக்கர் சொன்ன பெண்கள் என்று உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்து செல்கிறான். அந்தப் பெண்களின் முன்னால் சென்று பார்க்க அனைவருமே வயது முதிர்ந்த கிழவிகளாக இருக்கிறார்கள். இதை பார்த்து வெற்றி டென்ஷன் ஆகிறான்.

Also read... 'ஜப்பான்' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. குஷியில் கார்த்தி ரசிகர்கள்!

அடுத்து வெற்றி சக்தியிடம் புரோக்கர் என்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்ல புரோக்கர் இல்லை நான் தான் இப்படி மாற்றிவிட்டேன் என்று வெற்றியிடம் சக்தி சொல்லி சிரிக்கிறாள்.

இறுதியாக ரங்கநாயகியின் வீட்டிற்கு அசோக் காரில் வந்து இறங்கி சரண்யாவை சந்தித்து அவளை காரில் அழைத்துச் செல்கிறான். எதிரே வெற்றியும் சக்தியும் வருகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv