முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முதலிரவுக்காக காத்திருந்த சக்திக்கு வெற்றி கொடுத்த அதிர்ச்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

முதலிரவுக்காக காத்திருந்த சக்திக்கு வெற்றி கொடுத்த அதிர்ச்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

முதலிரவை கொண்டாட காத்திருந்த சக்திக்கு வெற்றி கொடுத்த அதிர்ச்சி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி வெற்றி இருக்கும் இடத்திற்கெல்லாம் சென்று, பேச முற்பட வெற்றி விலகி செல்கிறான். அதன் பிறகு வெளியே கிளம்பும் வெற்றிக்கு சக்தி வாசல் வரை சென்று வழி அனுப்பி இன்று நமக்கு முதலிரவு சீக்கிரமாக வந்து விடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள்.

அதன் பிறகு வெற்றிக்காக சக்தி காத்திருக்கிறாள். சக்தி தன் அறையை முதலிரவு அறையை போல அலங்கரிக்க, இதை பார்த்த வெற்றி ஏதோ யோசித்தவாறு அங்கிருந்து செல்கிறான்.

பிறகு சரண்யா சக்தியிடம் வந்து, வெற்றி சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கும் விஷயத்தை சொல்ல, நான் சாமியாகி விட்டேன் என்று வெற்றி சக்தியை கலாய்க்கிறான்.

Also read... இளம்பெண்களைக் கொல்லும் சீரியல் கில்லர்.. தேடுதல் வேட்டையில் பெண் அதிகாரி.. எப்படி இருக்கிறது 'தஹாத்'.? விமர்சனம் இதோ!

அதோடு சக்தி ஒவ்வொறு முறையும் வெற்றியுடன் பேச வரும் போது, சாமி சரணம் என்று சொல்லி வெற்றி விலகி போகிறான்‌. இப்படி அந்த நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv