முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சக்தியை சுட்டு தள்ள முடிவெடுத்த ரங்கநாயகி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

சக்தியை சுட்டு தள்ள முடிவெடுத்த ரங்கநாயகி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

கையில் தாலியுடன் வந்த பூஜா, சக்தியை சுட்டு தள்ள முடிவெடுத்த ரங்கநாயகி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தியால் தான் பஞ்சாயத்து கூட்டும் அளவிற்கு வந்துவிட்டது என்று ரங்கநாயகி சக்தியை திட்டிவிட்டு பஞ்சாயத்தில் இருந்து வெளியேறுகிறாள்.

இதையடுத்து வீட்டுக்கு சென்று செல்வமுருகனிடம் சரண்யாவிற்கு DNA டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று, அசோக் அம்மா சொன்னதாக சொல்கிறாள். அசோக் இங்கே வந்து போனதை நானே பார்த்திருக்கிறேன் என்று செல்வமுருகன் சொல்ல, அப்போது சத்தியும் அங்கே வர அசோக்கும் சரண்யாவும் சந்திக்கவில்லை என்று கோவிலில் வைத்து அசோக்கின் அம்மாவிடம் ஏன் சொன்னாய் என்று ரங்கநாயகி சக்தியை கேட்க, ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் சக்தி அப்படி சொல்லி இருப்பாள் என்று செல்வமுருகன் சொல்கிறார்.ஆனாலும் கோவம் அடைந்த ரங்கநாயகி துப்பாக்கி எடுத்து வந்து சக்தியின் நெற்றியில் வைக்க அதை வெற்றி தடுத்து காப்பாற்ற, அந்த நேரத்தில் பூஜா கையில் தாலியுடன் கோபமாக வாசலில் வந்து நிற்கிறாள்.

Also read... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உணவை சாப்பிட்டு மயங்கி விழுந்த சிறுவன் - வைரலான வீடியோ!

சக்தி கர்ப்பம் இல்லை என்று தெரிந்துவிட்டது பிரச்சனை எல்லாம் முடிந்து விட்டது இனி நீ போகலாம் என்று பூஜாவை செல்வமுருகன் சொல்கிறார். சக்தியும் பூஜாவை நீ இங்கிருந்து போய் விடு என்று சொல்ல அதற்கு பூஜா இது என் ரங்கநாயகி அத்தை வீடு நீ யார் போக சொல்வதற்கு என்று சொல்லி ரங்கநாயகியை கூப்பிட ரங்கநாயகி வருகிறாள்.

ரங்கநாயகியும் பூஜா நீ எங்கே இருக்க வேண்டாம் என்று சொல்ல, அதிர்ச்சியடைந்த பூஜா அங்கிருந்து கோபமாக செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published: