முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அசோக் குடும்பத்தால் ரங்கநாயகிக்கு ஏற்பட்ட அவமானம் - 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் அப்டேட்

அசோக் குடும்பத்தால் ரங்கநாயகிக்கு ஏற்பட்ட அவமானம் - 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

பஞ்சாயத்தை கூட்டிய அசோக் குடும்பம், ரங்கநாயகிக்கு ஏற்பட்ட அவமானம் என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் குடித்துவிட்டு வந்த வெற்றிக்கு சக்தி ஊட்டி விடுகிறாள். ஆனால் அவன் சாப்பிடாமல் துப்பி விடுகிறான். சக்தி சென்றதும் அவன் சாப்பிடுகிறான். இதை மறைந்திருந்து பார்க்கும் சக்தி சிரித்து விட்டு செல்கிறாள்.

அதன் பிறகு வீட்டிற்கு வெளியே சரண்யா ரங்கநாயகியை பஞ்சாயத்துக்கு அழைக்கிறாள். ஊர்க்காரர்களும் அழைக்கிறார்கள். உன்னால் தான் இந்த பிரச்சனை என்று சக்தியை முறைத்துவிட்டு ரங்கநாயகி பஞ்சாயத்துக்கு புறப்படுகிறாள். அதனை தொடர்ந்து அசோக் குடும்பம் மற்றும் சக்தி என அனைவரும் பஞ்சாயத்துக்கு வருகிறார்கள்.

பஞ்சாயத்தில் அசோக்கின் அம்மா, சரண்யா வயிற்றில் வளர்வது அசோக்கின் குழந்தை இல்லை வெற்றி மிரட்டியதால் அசோக் அப்படி சொல்லுகிறான் என்று சொல்லி, சக்தியே கோவிலில் வைத்து சரண்யாவும் அசோக்கும் சந்திக்கவில்லை என்று தன்னிடம் சொன்னதாக சொல்கிறாள்.

Also read... நயன்தாரா படத்தின் மூலம் மீண்டும் தமிழில் கம்பேக் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்!

 ஆனால் இப்போது சக்தி பொய் சொன்னதாக கூறுவது ஏற்க முடியாது, சக்திக்கு ரங்கநாயகி டி என் ஏ டெஸ்ட் எடுக்க சொன்னது போல சரண்யாவுக்கும் டி என்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்கிறாள். ரங்கநாயகி எல்லாம் சக்தியால் தான் என்பது போல் சக்தியை முறைக்க, வெற்றியும் சக்தியை கோபத்துடன் முறைத்து பார்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv