முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குடி போதையில் வெற்றி.. பழி தீர்க்கத் துடிக்கும் பூஜா - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

குடி போதையில் வெற்றி.. பழி தீர்க்கத் துடிக்கும் பூஜா - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

குடி போதையில் வெற்றி, பழி தீர்க்கத் துடிக்கும் பூஜாவிற்கு ஷாக் கொடுத்த சக்தி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கல்யாண மண்டபத்தில் பூஜாவை சரளா சமாதானப்படுத்த, பூஜா சக்தியை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கூறி விட்டு செல்கிறாள்.

அடுத்து ரங்கநாயகி ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டி விட்டு அருகில் ரிவால்வரை வைத்துக் கொண்டு, அறையில் உள்ள பொருட்களை எல்லாம் போட்டு உடைக்கிறாள். செல்வ முருகன் சமாதானப்படுத்தியும் அவள் வெளியில் வரவில்லை. இதற்கெல்லாம் காரணம் சக்தி தான் என்று வெற்றி சொல்ல, இல்லை நான் தான் காரணம் என்று சரண்யா சொல்கிறாள்.

மறுபக்கம் வெற்றி இன்று வீட்டிற்கு வந்து சக்தியை கூட்டிச் செல்வான் என்று யமுனாவும் துர்காவும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கின்றனர். மேலும் சக்தியிடம் அடிக்கடி வந்து போ எங்களையெல்லாம் மறந்து விடாதே என்று கூறிக்கொண்டு இருக்க வெளியில் ஒரு மோட்டார் பைக் வந்து நிற்க வெற்றி தான் வந்திருக்கிறான் என சென்றுபார்க்க அங்கு ஓட்டலுக்கு யாரோ சாப்பிட ஒரு கஸ்டமர் வந்திருக்க, வெற்றி ஓரிடத்தில் நின்று மது அருந்திக்கொண்டு இருக்கிறான். இதைப் பார்த்து சக்தி வருத்தம் அடைகிறாள்.

Also read... கடற்கரையில் கூல் போஸ்... வைரலாகும் ராஷ்மிகா மந்தனா க்ளிக்ஸ்!

இங்கே சக்தி வெற்றிக்காக காத்திருக்க வெற்றி சக்தியை அழைக்க வராமல் வெற்றி தன் வீட்டிற்கு போய் விடுகிறான். ரொம்ப பசிக்கிறது என்று சாப்பிட உட்கார அங்கே சக்தி வெற்றிக்கு பரிமாறுகிறாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெற்றி, சாப்பிட மறுத்து சக்தியுடன் சண்டை போடுகிறான். அவள் இது தன் வீடு,  நான் இங்கேதான் இருப்பேன் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv