முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அவமானப்பட்ட ரங்கநாயகி.. வெற்றி போட்ட கண்டிஷன் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

அவமானப்பட்ட ரங்கநாயகி.. வெற்றி போட்ட கண்டிஷன் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

அவமானப்பட்ட ரங்கநாயகி, வெற்றி போட்ட கண்டிஷன் என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரண்யாவை பரிசோதிக்கும் டாக்டர், சரண்யா கர்ப்பமாக உள்ளார் என்பதைச் சொல்லிவிட, ரங்கநாயகி அதிர்ச்சியாகிறாள். சரண்யா எல்லா உண்மைகளையும் சொல்கிறாள்.

சக்தி கர்ப்பம் இல்லை என்று சொல்ல, இனிமேல் அந்தக் கல்யாணம் நடக்காது என்று செல்வமுருகன் சொல்லிவிட, வெற்றி - பூஜா கல்யாணம் நின்று போகிறது. ரங்கநாயகி எல்லார் முன்னிலும் அவமானப்பட்டு தன் வீட்டுக்குப் போகிறாள்.

அதை தொடர்ந்து ரங்கநாயகி தன் வீட்டில் ஒரு அறையில் போய் கதவை பூட்டிக் கொள்கிறாள். பூஜா மண்டபத்தில் தாலியுடனேயே இருக்கிறாள். சரளாவிடம் கோபித்துக்கொண்டு தாலியுடன் வெளியே போகிறாள்.

Also read... அஜித்தின் பைக் டூர்.. முதல் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய விடாமுயற்சி நடிகர்!!

வெற்றி அசோக்கை கோபத்தில் அடிக்கிறான். இரண்டு நாள் டைம், அதுக்குள்ள ஊர் பஞ்சயாத்துல உண்மைய ஒத்துக்கிட்டு, சரண்யா வயித்துல வளர்றது உன் குழந்தைதான்னு சொல்லி அவளை சீர் செனத்தியோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போகணும் என்று கெடு விதிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv