முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஷக்தியின் தாலியை பறிக்கும் பூஜா? - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

ஷக்தியின் தாலியை பறிக்கும் பூஜா? - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

ஷக்தியின் தாலியை பறிக்கும் பூஜா, சரண்யாவுக்கு அதிர்ச்சி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கெட்டி மேளம் ஒலிக்க வெற்றி பூஜா கழுத்தில் தாலி கட்டுகிறான். தாலி ஏறியதும் பூஜா மேடையை விட்டு இறங்கி வந்து சக்தியை இனி நீ இருக்க வேண்டாம் கிளம்பி விடு என்று அவமானப்படுத்துகிறாள்.

உடனே சரளா பூஜாவிடம் இதுதான் சரியான நேரம் உன்னை அவமானப்படுத்திய சக்தியின் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி விட்டு கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே துரத்து என்று சொல்ல பூஜா சக்தியின் தாலியை பிடுங்க வர சக்தி வேண்டாம் என்று கதறுகிறாள். இதைப் பார்த்ததும் செல்வ முருகனுக்கு வலிப்பு வந்து விழுகிறார். பிறகு இது சரண்யா கண்ட கனவு என தெரிய வருகிறது.

அடுத்து கல்யாண மேடைக்கு வெற்றி வந்த அமர்கிறான். பூஜா சக்தியிடம் கல்யாண தாலியை கொண்டு போய் ஆசீர்வாதம் வாங்கி வரும்படி சொல்கிறாள். வெற்றி, சக்தியிடம் உன் ரகசியத்தை இப்பொழுது ஆவது சொல் என்று கேட்க, சக்தி அமைதியாக இருக்கிறாள். சரண்யாவும் கேட்க சக்தி அமைதியாகவே இருக்கிறாள்.

Also read... கதிருக்கு தீபா கொடுத்த அதிர்ச்சி - பரபர திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!

சக்தி எதையோ சொல்லி விடுவாளா என்ற பயத்தில் பூஜா ரங்கநாயகியிடம் இவள் திட்டமிட்டு ஏதோ நாடகம் நடத்துகிறாள் என்று சொல்ல ரங்கநாயகி கடைசியில் ஏன் இப்படி செய்கிறாய் மீனாட்சி பொண்ணு வார்த்தையை காப்பாற்றுவாள் என்று நினைத்தேன். ஏதோ ஒன்றை சொல்வதற்காக நீ தயாராக இருக்கிறாய் , இந்தக் கல்யாணத்தை நிறுத்தி விடாதே என்று சொல்ல சக்தி வேறு வழி இல்லாமல் எதையும் சொல்லாமல் மறைத்துக் கொண்டு தாலியை எடுத்துக்கொண்டு சென்று எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்க செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv