முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெற்றி - பூஜா திருமணத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் அப்டேட்!

வெற்றி - பூஜா திருமணத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

பூஜாவை நடுங்க வைத்த காதலன், திருமணத்தில் காத்திருந்த அதிர்ச்சி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகித் பூஜாவை பிளாக் மெயில் செய்கிறான். இதனால் பூஜாவின் தோழிகள் அனைவரும் அவளை விட்டு விடுமாறு கேட்கிறார்கள். ஆனால் ரோகித் நீயும் நானும் சேர்ந்து இருந்த வீடியோக்களை எல்லோரின் முன்னாலும் போட்டுக்காட்டுவேன் என்று சொல்லி விட்டு செல்கிறான்.

அடுத்து மண்டபத்தில் உள்ள டிவியில் ரோகித் தோன்றுகிறான் ஒரு முக்கியமான செய்தியை சொல்ல இருக்கிறேன் என்று கூறுகிறான் இதை பார்த்து பூஜா அதிர்ச்சி அடைகிறாள். அனைவரும் ரோகித் என்ன சொல்வானோ என பார்க்க கடைசியில் ரோகித் திருமண ஜோடிகளுக்கு வாழ்த்து என்று சொல்லி விடுகிறான்.

பின் பூஜாவை சந்தித்த ரோகித் என்னிடம் இன்னொரு பெண் டிரைவர் இருக்கிறது இதை போட்டால் நம் விஷயம் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்று மீண்டும் பூஜாவை பிளாக் மெயில் செய்து விட்டுப் போகிறான்.

இதனால் பூஜா ரோகித்தை கொன்றுவிட திட்டமிட்டு கதவு கைப்பிடியில் கரண்ட் ஒயரை கனெக்சன் கொடுத்துவிட்டு ரோகித்தை அழைத்து வர தன் தோழியை அனுப்ப, ரோகித் வந்து கதவின் கைப்பிடியைப் பிடித்து ஷாக் அடித்து மயங்கி விழுகிறான்.

Also read... பிகினியில் சொக்க வைக்கும் நடிகை அனன்யா பாண்டே!

மதுவை அவன் மீது தெளித்து குடித்து மயங்கி விழுந்தது போல் செட்டப் செய்து கல்யாணம் மண்டபத்தின் ஊழியர்களிடம் சொல்லி ரோகித்தை வேறு ஒரு அறையில் தூக்கி போட சொல்கிறாள். பூஜாவின் அம்மா தாலியை எல்லோரிடமும் ஆசீர்வாதம் செய்ய சக்தியையும் ஆசீர்வாதம் செய்ய சொல்ல சக்தி ஃபீல் ஆகிறாள்.

முகூர்த்த நேரம் நெறுங்க வெற்றி தாலியை எடுத்து கையில் வைத்துக் கொண்டிருக்க சக்தி கட்ட வேண்டாம் என்பது போல் பயத்துடன் நிற்க, ரங்கநாயகி பூஜா கழுத்தில் தாலி கட்டு என்று சொல்ல, வெற்றி கலக்கத்துடன் தாலி கட்டாமல் யோசிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv