முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குடிபோதையில் மயங்கிய வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

குடிபோதையில் மயங்கிய வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

குடிபோதையில் மயங்கிய வெற்றி, ஷக்திக்கு ஷாக் கொடுத்த ரங்கநாயகி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி போட்டு இருந்த மோதிரத்தை கழற்றி வெற்றி பூஜாவின் கையில் போட்டுவிட சத்தி அழுது கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறி ஒரு இடத்தில் வந்து நிற்கிறாள்.

அடுத்து வெற்றி சக்திக்கு மோதிரம் போட்ட பழைய காட்சியை நினைத்துப் பார்த்து அழுகிறாள். பின் சக்தி தன் வீட்டுக்கு செல்கிறாள் அங்கு துர்கா மற்றும் யமுனா சக்தியின் நிலைமையை பார்த்து, இப்பவாவது வெற்றியிடம் உண்மையை சொல்லிவிடு, வெற்றி பூஜாவை கல்யாணம் செய்து விட்டால் நீ என்ன செய்வாய் என்று கேட்க , சத்தி யோசித்தவாறு இருக்கிறாள்.

மகளின் நிலைமையை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் நீதிமணி மனம் வருத்தம் அடைகிறான். கல்யாண வீட்டில் வெற்றி பார்ட்டி கொண்டாடுகிறான், அங்கே குடித்துவிட்டு நடனம் ஆடுகிறான். இதைப் பார்த்து சரண்யா வருத்தம் அடைகிறாள் ஆனால் பூஜாவோ சந்தோஷப்படுகிறாள்.

மேலும் பூஜாவும் வெற்றியுடன் சேர்ந்து நடனம் ஆடுகிறாள். ஒரு கட்டத்தில் வெற்றி போதையில் தள்ளாடி விழ இதை பார்த்த திடியன் சக்திக்கு போன் செய்கிறான். உடனே சக்தி வீட்டில் இருந்து கிளம்பி கல்யாண மண்டபத்திற்கு வருகிறாள்.

Also read... அஜித்பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்! - திரைத்துறையினர் இரங்கல்

அங்கே ரங்கநாயகி இங்கேயே இரவு தங்கிவிடு வெற்றியை பார்த்துக் கொள் என்று கூறுகிறாள். போதையில் மயங்கி நிலையில் இருக்கும் வெற்றியை சக்தி கைதாங்களாக அழைத்துச் செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv