முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜூஸில் பேதி மாத்திரை... ஹாசினி போட்ட பிளான் - மாரி சீரியல் அப்டேட்!

ஜூஸில் பேதி மாத்திரை... ஹாசினி போட்ட பிளான் - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

ஜூஸில் பேதி மாத்திரை, தாராவின் திட்டத்தை முறியடிக்க ஹாசினி போட்ட பிளான் என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தாரா தாலியை மாலையில் மறைத்து வைத்த நிலையில் ஸ்ரீஜா ஒருவேளை சூர்யா மாமாவுக்கு விஷயம் தெரிந்து அவர் கோபப்பட்டா என்ன செய்வது என கேட்க தாரா அதுக்கும் என்னிடம் திட்டம் இருக்கு, ஒருவேளை சூர்யா கோபப்பட்டா உடனே நாம் மயங்கி விழுவது போல விழுந்துருவேன் அவன் கோபத்தை விட்டுட்டு எனக்கு என்ன ஆச்சுன்னு தான் பார்ப்பான் என சொல்கிறாள்.

அடுத்து சங்கரபாண்டி மாலை மாற்றும் பங்க்ஷன் நடந்து முடிந்ததும் இந்த கல்யாணத்தை பதிவு செய்ய ரெஜிஸ்டரை வர சொல்ல அவர் எப்படியும் இந்த கல்யாணம் நடக்க போறது இல்ல சூர்யாவின் முதல் மனைவி மாரிக்கு ஏதோ தெய்வ சக்தி இருக்கு அது நிச்சயம் கல்யாணத்தை நிறுத்த தான் போகுது. அந்த தெய்வ சக்தி கொண்ட பெண்ணின் முகத்தை பார்க்கத்தான் நான் வரேன் என சொல்லி வருகிறார்.

பிறகு சங்கர பாண்டி ஐயர் ஒருவரை பார்த்து அவரிடம் நீங்கள் மாலை மாற்றும் போது கல்யாணத்திற்கான மந்திரத்தை சொல்ல வேண்டும் என சொல்ல அவர் அப்படியெல்லாம் சொல்ல முடியாது என சொல்கிறார். உடனே சங்கர பாண்டி அதிகமான பணத்தை எடுத்துக் கொடுத்ததும் ஐயர் மந்திரத்தை மாற்றி சொல்ல ஒப்புக்கொள்கிறார்.

பிறகு மாரி ராசாத்தியின் அண்ணனுக்கு போன் போட்டு ஜாஸ்மின் கல்யாண சர்டிபிகேட் கேட்டிருந்தேன், என்ன ஆச்சு எனக் கேட்க அவர் ரெஜிஸ்டர் ஆபீஸ் தான் போயிட்டு இருக்கேன் நிச்சயம் வாங்கிட்டு வரேன் என சொல்கிறார். இங்கே வீட்டில் பூஜைக்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்க ஸ்ரீஜா சூர்யாவை ரெடி ஆகி வரச் சொல்கிறாள்.

இந்த நேரத்தில் ஹாசினி மற்றும் வீட்டில் உள்ள மற்றவர்கள் இது ஏதோ தப்பா இருக்கு இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என யோசிக்க ஹாசினி பேதி மாத்திரையை எடுத்துக்காட்டி தனது திட்டத்தை சொல்கிறாள்.

அடுத்து ரெஜிஸ்டர், அவருடைய அசிஸ்டன்ட் மற்றும் ஐயர் என மூவரும் வீட்டுக்கு வர மூவருக்கும் ஜூஸில் பேதி மாத்திரையை கலந்து கொடுக்க ரெஜிஸ்டர் மற்றும் அவரது அசிஸ்டன்ட் வேணான்னு சொல்லி விட ஐயர் மூன்று டம்ளர் ஜூஸையும் குடிக்க அவருக்கு ஹாசினி திட்டத்தின் படி பேதியாக தொடங்கி விடுகிறது.

பிறகு ராசாத்தியின் அண்ணன் திருமண சர்டிபிகேட்டை வாங்கி போன் போட்டு விஷயத்தை சொல்ல அவள் சூர்யாவிடம் நான் கோவிலுக்கு போயிட்டு வருகிறேன் என சொல்லி வீட்டில் இருந்து வெளியே வருகிறாள். மாரி ஆட்டோவில் வெளியே செல்வதை பார்த்து ஜாஸ்மின் அவளை பின்தொடர்ந்து வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv