முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தேவி வாங்கிய சத்தியத்தால் ஜெகதீஷ் எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்!

தேவி வாங்கிய சத்தியத்தால் ஜெகதீஷ் எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல் அப்டேட்

டம்மியாகும் தாரா, தேவி வாங்கிய சத்தியத்தால் ஜெகதீஷ் எடுத்த முடிவு என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜாஸ்மின் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்க அங்கே தோன்றும் தேவி சூர்யா மற்றும் மாரியை உங்களால் எதுவும் செய்ய முடியாது அவர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய நினைத்தால் உங்களை கொன்று விடுவேன் என சுவரில் எழுதி மிரட்டி அங்கிருந்து மறைகிறாள்.

அடுத்து சங்கர பாண்டி கதவை திறக்க குளிரில் நடுங்கி கொண்டிருக்கும் ஜாஸ்மின் நடந்த விஷயத்தை சொல்ல தாரா, ஸ்ரீஜா உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு ஜெகதீஷ் முன்பு தோன்றும் தேவி அம்மா மாரியை பற்றி பெருமையாக பேச ஜெகதீஷ் தாரா நல்லவள் என நம்பி ஏமாந்து விட்டதாக வருத்தப்படுகிறார். சூர்யா இப்போது தான் மாரியை புரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறான் கூடிய சீக்கிரம் அவன் தாராவை பற்றி தெரிந்து கொள்வான் என தேவி ஆறுதல் சொல்கிறாள்.

இருந்தபோதிலும் ஜெகதீஷ் தாராவை பற்றி சூர்யாவிடம் சொன்னால் அவன் நிச்சயம் நம்ப மாட்டான், அந்த அளவிற்கு அவள் பொய்யான பாசத்தை காட்டி அவனுக்கு நெருக்கமாக இருக்கிறாள் என சொல்கிறார்.

அதன் பிறகு தேவி மாரி இந்த குடும்பத்துக்காக நல்லதை மட்டுமே நினைப்பவள், என்னால் செய்ய முடியாததை கூட அவள் செய்திருக்கிறாள். இந்த வீட்டின் அடுத்த தேவியாக மாரி தான் இருக்க வேண்டும் அது உங்களுடைய பொறுப்பு என ஜெகதீஷிடம் சத்தியம் வாங்கி அங்கிருந்து மறைக்கிறாள் தேவி.

உடனே ஜெகதீஷ் ஆடிட்டருக்கு போன் போட்டு நாளைக்கு காலையில் முதல் வேலையாக வீட்டு பத்திரம் மற்றும் பிசினஸ் தொடர்பான ஆவணங்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருமாறு சொல்கிறார். மேலும் இதுவரை தேவியின் பெயரிலிருந்த அனைத்து சொத்துகளையும் மாரியின் பெயருக்கு மாற்ற போவதாக கூறுகிறார்.

மறுநாள் காலையில் மாரி மதர்ஸ் டே கொண்டாட்டத்திற்காக வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் சூர்யா எதுக்கு இந்த அலங்காரம் என கேட்க உங்களைப் பெற்ற தேவி அம்மா மற்றும் வளர்த்த தாரா அம்மாவையும் கொண்டாடுற நேரம் என சொல்லி கேக் வெட்டி இருவருக்கும் ஊட்டச் சொல்கிறாள்.

சூர்யா கேக் வெட்டி தேவி போட்டோ முன்பு காண்பிக்க அங்கு தேவி தோன்றி ஆனந்த கண்ணீர் வடிப்பது போல மாரிக்கு தெரிகிறது. மேலும் தேவி மாரிக்கு நன்றி சொல்ல மாரி இதை பார்த்து சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv