முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / படுக்கையில் எலும்புக்கூடு.. கலெக்டரிடம் மனு - பரபர கட்டத்தில் மாரி சீரியல்!

படுக்கையில் எலும்புக்கூடு.. கலெக்டரிடம் மனு - பரபர கட்டத்தில் மாரி சீரியல்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

கலெக்டரிடம் மாரி வைத்த கோரிக்கை, பயந்து ஓடிய தாரா டீம்  என மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மாடத்தி அம்மன் கோவில் கட்ட பூமி பூஜைக்காக பள்ளம் தோண்டிய போது அங்கு புதையல் கிடைக்க இதை பார்த்த தாரா டீம் அதிர்ச்சி அடைகிறது.

அடுத்து ஊர்காரர்கள் இந்த புதையலை கோவில் கட்ட பயன்படுத்திக் கொள்ளலாம் என சொல்ல சூர்யா பூமிக்கு அடியில் கிடைப்பதால் அரசாங்கத்துக்கு சொந்தமானது என சொல்லி கலெக்டருக்கு தகவல் கொடுக்க கொஞ்ச நேரத்தில் கலெக்டர் அந்த இடத்துக்கு வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் முதல் த்ரிஷா வரை... சிஎஸ்கே போட்டியை கண்டு களித்த பிரபலங்கள்..!

பிறகு இந்த புதையலை அவரிடம் ஒப்படைக்க கலெக்டர் சூர்யா மற்றும் மாரியை பாராட்ட மாரி அவர்களையும் பூஜையில் கலந்து கொள்ள சொல்ல கலெக்டரும் பூஜையில் பங்கேற்கிறார். மேலும் கோவில் கட்ட தேவையான உதவிகளை செய்வதாக சொல்ல மாரி இந்த சமயபுரத்தில் ஸ்கூல், ஹாஸ்பிடல், பஸ் ஸ்டாப் போன்ற வசதிகள் இல்லை, அதை செய்து கொடுங்கள் என சொல்ல கலெக்டர் கண்டிப்பாக செய்து தருவதாக சொல்கிறார்.

வீட்டுக்கு வந்த ஜாஸ்மின் மாரிக்கு எதிராக செய்யும் வேலை எல்லாம் இப்படி பலிக்காமல் போகுது என பெட் ரூமில் தனது டீமுடன் புலம்ப அங்கே யாரோ படுத்து கொண்டிருப்பது போல் இருக்கிறது. இதனால் போர்வையை எடுக்க அங்கு எலும்பு கூடு இருக்க அனைவரும் அலறி ஓடுகின்றனர்.

அதற்கு அடுத்ததாக ஹாசினி கதவை திறக்க பத்திரிக்கையாளர்கள் மாரியை பேட்டி எடுக்க வந்திருக்கின்றனர். ஆனால் மாரி பேட்டி கொடுக்க பயப்பட சூர்யா அவளுக்கு அறிவுரை வழங்கி பேட்டி கொடுக்க வைக்கிறான்.

மாரி தன்னுடைய ஊர் மக்கள் பற்றி பெருமையாக பேச பத்திரிகையாளர்கள் நீங்களே பணக்கார குடும்பம் தானே, அப்படி இருக்கும் போது ஏன் மக்களிடம் பணம் வசூலிக்கிறார்கள் என கேட்க மாரி கோவில் என்பது பொது சொத்து, நாங்கள் மட்டுமே பணம் போட்டு கட்டினால் அது எங்க குடும்ப கோவிலாக மாறிடும் என விளக்கம் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv