முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கையை தொட்டதற்கே கர்ப்பமா? - மாரி சீரியலை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

கையை தொட்டதற்கே கர்ப்பமா? - மாரி சீரியலை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

மாரி

மாரி

அடேய் கைய தான தொட்டான் அதுக்குள்ள கர்ப்பமா? 90'ஸ் கிட்ஸ் கதையா இருக்கே என மாரி சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரஜினி சீரியல் முடிவுக்கு வந்ததிலிருந்து மாரி சீரியல் 45 நிமிடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது தேவயானி முத்துப்பேச்சியாக இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் மாரி கோவில் திருவிழாக்காக சூர்யாவுடன் சமயபுரம் வந்துள்ளார். மாரியின் வீட்டில் சூர்யா மற்றும் மாரிக்கு முதல் இரவு ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் நேற்றைய எபிசோடு சூர்யா மாரி என் கையை பிடிக்க அடுத்த சீனில் மாரி கர்ப்பமாக வருவது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது.

Also read... மலையாள படத்தைப் பார்த்து எழுதியதுதான் கஸ்டடி - இயக்குநர் வெங்கட் பிரபு ஓபன் டாக்!

இதனைப் பார்த்து ரசிகர்கள் அடேய் அவன் கைய தான பிடிச்சான், அதுக்குள்ள கர்ப்பமா என கலாய்த்து வருகின்றனர். மேலும் கட்டிப்பிடிச்சா குழந்தை பிறந்துடும்னு 90'ஸ் கிட்ஸ் நம்பிகிட்டு இருந்த மாதிரி இருக்கே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv