முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தீபாவுக்கு கார்த்தி கொடுத்த கிப்ட் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

தீபாவுக்கு கார்த்தி கொடுத்த கிப்ட் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

தீபாவுக்கு கார்த்தி கொடுத்த கிப்ட், திருட்டுப்பழி திட்டம் போடும் நட்சத்திரா அடுத்து நடக்கப்போவது என்ன என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் தீபா மீனாட்சியிடம் தனது கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்துக்காட்டி கார்த்தி குளத்தில் விட்ட தாலி தனது கழுத்தில் மாட்டிக் கொண்ட விஷயத்தை சொல்கிறாள். மேலும் இந்த தாலியை கழட்டவும் முடியலை கழுத்தில் மாட்டிக்கிட்டு இருக்கவும் முடியலை என சொல்லி புலம்ப மீனாட்சி இதெல்லாம் விதி நீ கவலைப்படாத என சொல்லி அங்கிருந்து நகர்கிறாள்.

அடுத்து நட்சத்திரா டூப்ளிகேட் அம்மா அப்பாவிடம் இருந்து வாங்கி வந்த தங்க நகைகளை கதிரிடம் கொடுத்து இந்த நகையை எடுத்துச் சென்று தீபாவின் வீட்டில் வைத்து விடு. அவள் நகையை திருடியதாக பழி போட்டு ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விடலாம். அவள் கார்த்தியோட ரொம்ப க்ளோசா இருக்கா என்ன பத்தியான விஷயங்களை சொன்னா நம்ம திட்டமெல்லாம் வேஸ்ட் ஆகிவிடும் என சொல்கிறாள்.

அடுத்து கார்த்தியும் தீபாவும் ரூமில் இருக்கும் போது கார்த்தி நாளைக்கு நீங்க உங்க வீட்ல இருப்பீங்க நீங்க என்னுடைய வாழ்க்கையில் எனக்காக செய்த விஷயங்களை எப்போதும் மறக்க மாட்டேன் என சொல்ல தீபாவும் கார்த்தி தனக்காக செய்த உதவிகளை சொல்லி உங்களையும் என்னால் மறக்க முடியாது என சொல்கிறாள். அடுத்து கார்த்தி தீபாவுக்கு ஒரு கிப்டை  கொடுத்துவிட்டு நாளைக்கு எனக்கு மீட்டிங் ஒன்னு இருக்கு நான் தூங்குகிறேன் என படுத்துக் கொள்கிறான்.

தீபா கார்த்திக் கொடுத்த கிப்ட் பிரித்து பார்க்க அதில் ஹார்ட் சிம்பல் போட்ட பவுல் ஒன்று இருக்கிறது. இதைப் பார்த்த தீபாவுக்கு கார்த்தி உடனான பழைய நினைவுகள் அனைத்தும் ஞாபகத்திற்கு வருகிறது.

அடுத்து ஐஸ்வர்யா தனது ரூமில் நட்சத்திராவின் பர்ஸ் ஒன்று இருக்க அதை திறந்து பார்க்கும் போது நட்சத்திராவும் அவளது காதலனும் இருக்கும் புகைப்படம் இருப்பதை பார்த்து இது எதுக்கு இங்கே வந்தது என யோசனையில் இருக்க அப்போது உள்ளே வரும் நட்சத்திரா பட்டுப் புடவை ஒன்றை கொடுத்து உங்களுக்காக வாங்கியதாக சொல்லி ஐஸ்வர்யாவுக்கு ஐஸ் வைத்து அவளது காலில் விழுந்து எனக்கு நீங்கதான் சப்போட்டா இருக்கணும் என கேட்க ஐஸ்வர்யாவும் ஒரு கட்டத்தில் நட்சத்திராவுக்கு சப்போட்டா இருப்பதாக சொல்லி கட்டிப்பிடிக்கிறாள். இந்த கேப்பில் நட்சத்திரா ஐஸ்வர்யா ரூமில் இருக்கும் தனது பர்சை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்து விடுகிறாள்.

பிறகு கதிர் கல்யாண ஏற்பாடுகளை செய்வதற்காக சிவா அனுப்பியதாக சொல்லி சில பொருட்களுடன் வண்டியில் வந்து தீபாவின் வீட்டுக்குள் நுழைகிறான். நட்சத்திரா கொடுத்த தங்க நகைகளை தீபா வீட்டில் அரிசிக்குள் ஒளித்து வைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv