முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீனாட்சியிடம் தாலியை எடுத்து காட்டி உண்மையை கூறும் தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

மீனாட்சியிடம் தாலியை எடுத்து காட்டி உண்மையை கூறும் தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

மீனாட்சியிடம் தாலியை எடுத்து காட்டி உண்மையை கூறும் தீபா, ஜானகிக்கு கார்த்தி செய்த சத்தியம் என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்தி மற்றும் தீபா என இருவரும் பூஜையறையில் விளக்கேற்றி சாமி கும்பிட மீனாட்சி கண்ணுக்கு அவர்கள் புருஷன் பெண்டாட்டி போலவே தெரிகின்றனர்.

அடுத்து தீபா ரூமுக்குள் செல்ல அங்கே அவளது அம்மா ஜானகி இருப்பதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்து ஓடி சென்று கட்டிக் கொள்கிறாள். அம்மாவை நலம் விசாரிக்க அவள் இன்னும் இரண்டு நாளில் கல்யாணம், நீ எப்படி வீட்டுக்கு வர போற என கேட்க கார்த்தி துரையை எப்படியாவது சமாளித்து தீபாவை நான் கொண்டு வந்து விடுகிறேன் என வாக்கு கொடுக்கிறான்.

அடுத்து ஜானகி வீட்டுக்கு கிளம்பிய போது கோவிலுக்கு போன ஐஸ்வர்யா மற்றும் அபிராமி உள்ளே வர இவளை பார்த்து விடுகின்றனர். ஐஸ்வர்யா நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என கோபம் அடைய மீனாட்சி பத்திரிகை வைக்க வந்ததாக சொல்லி சமாளிக்கிறாள்.

பிறகு அபிராமி கார்த்தி கல்யாண பத்திரிக்கையை கொடுத்து உங்க வீட்டில் இருந்து யாராவது ஒருவராவது இந்த கல்யாணத்துக்கு வர வேண்டும் என அழைப்பு கொடுக்கிறாள். அடுத்து அபிராமி வீட்டுக்கு வந்த நட்சத்திராவிடம் உங்க அப்பா அம்மா நகை எடுத்துட்டாங்களா என கேட்க அவள் எதையோ சொல்லி சமாளிக்கிறாள்.

அதை தொடர்ந்து நட்சத்திரா டூப்ளிகேட் அப்பா அம்மா வீட்டுக்கு வந்து நான் அந்த வீட்டு மருமகளாக ஆனதும் உங்களுக்கு ஒரு பங்கு தரேன் என சொல்லி அவர்களிடம் டீல் பேசி திருடி வந்த நகைகளை வாங்கி செல்கிறாள்.

இந்த பக்கம் மீனாட்சி தீபாவை பார்க்க வர அவள் இரண்டு நாளில் இந்த வீட்டில் இருந்து சென்று விடுவேன் என கண் கலங்குகிறாள். அடுத்து தனது கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்துக் காட்டி கார்த்தி கட்டிய தாலி தனது கழுத்தில் ஏறிய விஷயத்தை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv