முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தீபாவை கொல்ல வந்து கார்த்தியிடம் சிக்கிய கதிர் - ’கார்த்திகை தீபம்’ சீரியல் அப்டேட்

தீபாவை கொல்ல வந்து கார்த்தியிடம் சிக்கிய கதிர் - ’கார்த்திகை தீபம்’ சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

தீபாவை கொல்ல வந்து கார்த்தியிடம் சிக்கிய கதிர், அடுத்து நடக்க போவது என்ன என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்தி தீபாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வந்த நிலையில் அங்கு நர்ஸ் வேடத்தில் ஒருவன் தீபாவுக்கு விஷ ஊசி போட முயற்சி செய்ய கார்த்தி அதை தடுத்து அவன் முகத்திரையை கிழிக்க பிறகு அது நட்சத்திராவின் காதலன் கதிர் என தெரிய வருகிறது.  இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த நட்சத்திரா பயத்தில் அடுத்து என்ன செய்வது என யோசிக்கிறாள்.

பிறகு கார்த்திக் அவனை போலீஸில் பிடித்து கொடுத்து விடலாம் என ஒரு ரூமில் அடைத்து வைத்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அவர்களை வர வைக்க அதற்குள் நட்சத்திரா மாறு வேடத்தில் வந்து அவனை தப்பிக்க வைக்கிறாள். போலீஸ் வந்து பார்க்கும் போது அந்த ரூமில் கதிர் இல்லாமல் இருக்க அதிர்ச்சி அடைகிறார்கள்.

அடுத்து தீபா கண் விழித்ததும் கார்த்தி ஏன் இப்படி பண்ணீங்க என கேட்க என்னால் உங்களுக்கு நிறைய பிரச்சனை அதனால் தான் இப்படி செய்ததாக சொல்ல கார்த்தி உங்க அப்பா அம்மா என்னை நம்பி தான் உங்களை என் கூட இருக்க சொல்லி இருக்காங்க என பதில் சொல்கிறான். அடுத்து ஜானகி போன் செய்ய தீபா கோவிலுக்கு போயிருந்ததாக சொல்லி சமாளிக்கிறாள்.

மறுபக்கம் அபிராமி வீட்டில் இருக்கும் போது நட்சத்திராவின் டூப்ளிகேட் அம்மா அப்பா போலி நகைகளுடன் வீட்டுக்கு வந்து நட்சத்திராவுக்கு நகை எடுக்கணும், நீங்க எடுத்த டிசைனாக இருக்க கூடாது என்பதற்காக அந்த நகைகளை பார்க்க வந்தோம் என சொல்கின்றனர்.

முதலில் நகை எல்லாம் வேண்டாம் என அபிராமி சொல்ல அவர்கள் அபிராமியின் மனதை மாற்றுகின்றனர். அடுத்து நகைகளை பார்த்து கொண்டிருக்கும் போது அபிராமியை திசை திருப்பி போலி நகைகளை மாற்றி வைக்கின்றனர்.  இந்த நேரத்தில் மீனாட்சி அங்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv