முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மணக்கோலத்தில் வந்த கார்த்திக், தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

மணக்கோலத்தில் வந்த கார்த்திக், தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

மணக்கோலத்தில் வந்த கார்த்திக், தீபா, அபிராமிக்கு சாமி கொடுத்த வாக்கு என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் தீபா மற்றும் கார்த்தி என இருவரும் திருமண கோலத்தில் வந்து இறங்க அபிராமியின் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. கடைசியில் பார்த்தால் அது மீனாட்சி கண்ட கனவு என தெரிய வருகிறது.

விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் காணும் கனவு பலிக்கும் என்பதால் மீனாட்சி கார்த்திக், தீபா திருமணம் கட்டாயம் நடக்கும் என நினைக்கிறாள். தன்னுடைய கணவரிடம் இது குறித்து கேட்க விடியற்காலை கண்ட கனவு கண்டிப்பாக பலிக்கும் என சொல்கிறார்.

அடுத்து மீனாட்சி காபி எடுத்துக்கொண்டு கார்த்தி ரூமுக்கு வர கார்த்திக் தூக்கத்தில் இருக்க தீபாவிடம் நான் ஒரு கனவு கண்டேன் நிச்சயம் உனக்கும் கார்த்திக்கும் கல்யாணம் நடக்கும் என சொல்ல அரை தூக்கத்தில் கார்த்தி எழுந்து கண்டிப்பாக நீங்க நினைக்கிறது நடக்கும் என சொல்கிறான். உடனே மீனாட்சி முழுசா நீங்க கேட்டீங்களா என கேட்க இல்ல ஆனா நீங்க நினைக்கிறது நடக்கும் என சொல்கிறான்.

அதன் பிறகு அபிராமி கோவிலுக்கு வர அதே கோவிலில் ஜானகி தன்னுடைய மகள் தீபாவுக்கு நல்லபடியாக கல்யாணம் நடக்க வேண்டும் என வேண்டிக் கொண்டிருக்க அபிராமி வந்ததும் அங்கே இருக்கும் பெண் ஒருவருக்கு சாமி வருகிறது. தன்னுடைய மகனுக்கு கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என அபிராமி குறி கேட்க நிறைய தடங்கல்கள் வரும் ஆனால் இந்த கல்யாணம் நடக்கும். கல்யாணம் நல்லபடியாக நடக்க நீ போய் ஒரு தாலி வாங்கிட்டு வா நான் பூஜை பண்ணி தரேன் என சொல்ல அபிராமி உடனடியாக தாலி ஒன்று வாங்கி வந்து சாமி ஆடும் பெண்ணிடம் கொடுக்கிறார்.

அதை பூஜை செய்து கொடுக்கும் சாமியாடி பெண் இதை ஏதாவது ஒரு அம்மன் கோவில் குளத்தில் போடு தடைகள் நீங்கி கல்யாணம் நல்லபடியாக நடக்கும் என சொல்கிறாள். அடுத்து மீனாட்சி தீபாவை அழைத்துக் கொண்டு குருஜியை பார்க்க செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv