ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆனந்த் ஆபீஸ் விஷயமாக உடனடியாக பெங்களூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதை அறிவிக்கும் மீனாட்சி பொதுவாக ஆபீஸ் மீட்டிங் என்றால் கார்த்தி தானே போவாரு நீங்க எதுக்கு போறீங்க என கேட்க அவனுக்கு கல்யாணம் இருக்கு இல்ல அதனால நான் போயிட்டு வரேன் என சொல்கிறான்.
ஆனால் மீனாட்சி இந்த சந்தர்ப்பத்தை வைத்து கார்த்திக் மற்றும் தீபாவை ஒன்றாக வெளியே அனுப்பி வைக்க வேண்டும் இதனால் இவர்களுக்குள் காதல் மலரும் என திட்டமிட்டு ஆனந்துக்கு காபியில் பேதி மாத்திரை கலந்து கொடுக்கிறார். இதனால் அவனது உடல்நிலை சரியில்லாமல் போக அப்போது அங்கு வரும் அருணாச்சலம் சரி நான் போயிட்டு வருகிறேன் என சொல்ல ஐஸ்வர்யா நீங்க எதுக்கு போறீங்க அருண் போகட்டும் அவரால் இதெல்லாம் பண்ண முடியாதா என்ன என சொல்கிறாள்.
உடனே அருண் பெங்களூர் செல்ல ஓகே சொல்ல மீனாட்சி அருணையும் தடுத்து நிறுத்துவதற்காக அவன் ரூமின் வெளியே எண்ணெய் கொட்டி விட அருணுக்கு பதிலாக ஐஸ்வர்யா வந்து வழுக்கி விழுகிறாள். இதனால் அருண் ஐஸ்வர்யாவை கவனித்துக் கொள்ளும் நிலை உருவாகி அவன் பெங்களூர் செல்ல முடியாமல் போகிறது.
இதனால் அபிராமி கார்த்திகை பெங்களூரு போயிட்டு வரட்டும் என சொல்ல மீனாட்சி பிளான் சக்சஸ் ஆகிறது. மேலும் அபிராமி சாமியாடி பெண் பூஜை செய்து கொடுத்த தாலியை கார்த்தியிடம் கொடுத்து போகும்போது துர்க்கை அம்மன் கோவில் குளத்தில் இந்த தாலியை போட்டுவிட்டு செல்லுமாறு சொல்கிறாள்.
மறுபக்கம் நட்சத்திரா தன்னுடைய காதலனுக்கு போன் செய்து இப்போதைக்கு நீங்க இருக்கிறது சரி வராது நீ பெங்களூரு போய்விடு என சொல்ல அவன் பெங்களூர் கிளம்பி செல்கிறான். இதனால் நட்சத்திராவின் காதலன் கார்த்தியிடம் சிக்கிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv