முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கார்த்தியின் திருமணம் நடக்காது என சித்தர் கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல்!

கார்த்தியின் திருமணம் நடக்காது என சித்தர் கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல்!

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்தியின் கல்யாணத்துக்காக ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்க அபிராமி தாலியை கொண்டு போய் கோவிலில் பூஜை செய்ய அப்போது ஐயர் சித்தர் ஒருவர் வந்திருக்கிறார், அவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்ல அபிராமி சித்தரை நோக்கி நகர்கிறாள்.

சித்தரிடம் தாலியை கொடுத்து ஆசிர்வாதம் செய்ய சொல்ல நடக்காத கல்யாணத்துக்கு ஆசிர்வாதமா என அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் அபிராமி சித்தர் நீங்க இப்படி சொல்லலாமா? இதுக்கு பரிகாரம் இல்லையா? என கேட்க நீ இந்த கல்யாணத்தில் இருக்க கூடாது அது தான் பரிகாரம் என சொல்லி அபிராமிக்கு இன்னும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

நீயும் அவனும் இந்த ஜென்மத்தில் அம்மா புள்ளையா இருக்கலாம், போன ஜென்மத்தில் நீங்க விரோதிகள் என சொல்ல அபிராமி வருத்தப்பட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். மறுபக்கம் ஜெயிலில் இருந்து வெளியே வரும் துரை கார்த்தி, தீபா கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என முடிவெடுக்கிறான்.

அடுத்து கார்த்தி வீட்டில் எல்லோரும் கல்யாணத்துக்கு கிளம்ப கார்த்தி மற்றும் நட்சத்திரா பூஜையறையில் விளக்கேற்றி விட்டு பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர்.

அடுத்து அபிராமி, அருணாசலம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர். பிறகு எல்லோரும் மண்டபத்துக்கு கிளம்ப தடபுடலாக கொண்டாட்டம் தொடங்குகிறது. அபிராமி சோகமாக இருப்பதை பார்த்த பாட்டி காரணம் கேட்க அபிராமி ஒன்றுமில்லை என்று சமாளிக்கிறாள்.

இருந்தாலும் பாட்டி விடாமல் கேள்வி கேட்க அபிராமி சித்தர் சொன்ன விஷயங்களை சொல்கிறாள். பிறகு கார்த்தியும் நட்சத்திராவும் அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலம் வர மீனாட்சி கண்ணுக்கு கார்த்தி, தீபா ஒன்றாக இருப்பது போல் தெரிகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv