ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கார்த்தியின் கல்யாண ஊர்வலம் தொடங்கி நடக்க மீனாட்சி கார்த்தியின் பக்கத்தில் தீபா உட்கார்ந்து இருப்பது போல நினைத்து சந்தோஷப்படுகிறாள்.
அடுத்து ஊர்வலம் சென்று கொண்டிருக்கும் போது தீபா தன்னுடைய தோழியுடன் துணி கடைக்கு வர அப்போது இதை பார்த்து அதிர்ச்சியோடு நிற்கிறாள். இந்த கல்யாணம் நடக்கக்கூடாது கடவுள் கண்டிப்பா இதை நிறுத்துவார் என தீபா கடவுளிடம் வேண்டுகிறாள்.
தீபாவை பார்த்த நட்சத்திரா ஐஸ்வர்யாவுக்கு சைகை கொடுக்க இருவரும் தீபாவை ஏளனமாக பார்க்கின்றனர். அதன் பிறகு ஊர்வலம் அப்படியே நகர்ந்து செல்ல 4 பாடிகார்ட்டுகளுடன் காரில் மாசாக வந்து இறங்கி அபிராமி உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார் சாமுண்டீஸ்வரி ( வனிதா விஜயகுமார்).
ஏற்கனவே இவர் மகள் அருணா என்றவரை கார்த்திக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில் அபிராமி அதனை நிராகரித்ததால் சாமுண்டீஸ்வரிக்கு பத்திரிக்கை கொடுக்காமல் விட்டு இருந்தாள்.
இப்படியான நிலையில் சாமுண்டீஸ்வரி வந்து இறங்க அனைவரும் அதிர்ச்சியாக அவர் நான் கல்யாணத்தை நிறுத்த வரல நான் பழசு எல்லாம் அப்பவே மறந்துட்டேன் எனக்கும் கார்த்தியோட கல்யாணத்தை பார்க்க ஆசை என சொல்லி கல்யாண ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்.
அதுவும் இல்லாம ஊர்வலம் என்ன அமைதியா இருக்கு என சொல்லி ஆட்டத்தை அதிகப்படுத்துகிறார். பிறகு கார்த்தியும் நட்சத்திராவும் கல்யாண மண்டபத்திற்கு வர அவர்களுக்கு ஆரத்தி எடுத்து முடித்ததும் பெரியவர்கள் நட்சத்திராவிடம் விளக்கு ஒன்றை கொடுத்து இதை அணையாமல் கொண்டு வந்து உள்ளே வைக்க வேண்டும். பிறகு கல்யாணம் முடிந்ததும் வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என சொல்ல அபிராமி நான் நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க என சொல்கிறாள்.
Also read... நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!
அடுத்து ஐஸ்வர்யா அபிராமி மனதில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க இதெல்லாம் செய்துதான் ஆக வேண்டும், பத்திரமாக செய்யணும் என அறிவுரை வழங்குகிறாள். மறுபக்கம் ராஜ ஸ்ரீ மற்றும் ரூபஸ்ரீ கல்யாண மண்டபத்திற்கு வந்திருக்க ரூபஸ்ரீ கார்த்தியை பார்த்து பீல் பண்ண ராஜஸ்ரீ தாலி கட்டும் வரை டைம் இருக்கு, கண்டிப்பா கார்த்தியை உன் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறேன் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv