முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தீபாவால் கார்த்தியிடம் சிக்கிய கதிர் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

தீபாவால் கார்த்தியிடம் சிக்கிய கதிர் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

தீபாவால் கார்த்தியிடம் சிக்கிய கதிர் என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட் ‌.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவா காரில் போதை பொருள் இருப்பதால் கைது செய்யப்பட பிறகு அது அனைத்தும் நட்சத்திராவின் திட்டம் என தெரிய வருகிறது.

அடுத்து நட்சத்திரா வீட்டுக்குள் இருக்கும் போது அவளது காதலன் கதிர் போன் செய்து பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து இருப்பதாக சொல்லி கூப்பிட முதலில் மறுக்கும் நட்சத்திரா பிறகு ரூம் கதவை உள்ளே தாழ் போட்டுவிட்டு ஜன்னல் வழியாக வெளியே வந்து சுவர் ஏறி குதித்து பார்டிக்கு செல்கிறாள்.

இந்த சமயத்தில் தையல் காரரிடம் ஜாக்கெட் வாங்க வர அப்போது கதிர், நட்சத்திரா ஜோடியாக செல்வதை பார்க்கும் தீபா அதை கார்த்திக்கு தெரியப்படுத்த அவன் நீங்க அவங்களை பாலோ பண்ணுங்க நான் வரேன் என சொல்லி கிளம்புகிறான்.

அப்போது மீனாட்சி எதிரே வர அவளிடம் விஷயத்தை சொல்ல இதை ஐஸ்வர்யா ஒட்டு கேட்டு விடுகிறாள். அடுத்து கதிர் நட்சத்திரா கட்டி பிடித்து ஆட்டம் போட கொஞ்ச நேரத்தில் கதிர் சோகமாகிறான்.

இதனால் நட்சத்திரா காரணம் கேட்க உனக்கு கல்யாணம் ஆனதும் அடிக்கடி இப்படி பார்க்க முடியாது என வருத்தமாக பேச நட்சத்திரா என்னுடைய பிளான் படி அபிராமி சொத்தை ஆட்டைய போட்டதும் உன் கூட வந்துடுவேன், உன்னை விட்டு போக மாட்டேன் என பேச கதிர் இதையெல்லாம் ரகசியமாக ரெக்கார்ட் செய்து கொள்கிறான்.

தீபா வெளியில் நின்று காத்துக் கொண்டிருக்க கார்த்தி வேகமாக வந்து கொண்டிருக்க ஐஸ்வர்யா நட்சத்திராவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல முயற்சி செய்ய போன் நாட் ரீச்சேபிள் என வருகிறது.

Also read... ''என் உடலில் மைக்ரோசிப்.. தனுஷ் உடனான காதல் வதந்தி...'' கொதித்து பேசிய ஸ்ருதிஹாசன்!

கார்த்தி ஓட்டலுக்கு வத்து தீபாவை சந்தித்து உள்ளே போகும் சமயத்தில் ஐஸ்வர்யா நட்சத்திராவுக்கு தகவல் சொல்லி விட அவள் எஸ்கேப் ஆகிறாள். ஆனால் கதிர் சிக்கி கொள்ள பிறகு அவனுக்கும் கார்த்திக்கும் மோதல் உருவாகிறது. இந்த மோதலுக்கு இடையே தீபா கழுத்தில் இருக்கும் தாலி வெளியே வந்து விழ அதை கதிர் பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv