முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கைதாகும் தீபா? கடைசி நொடியில் கார்த்திக் எடுத்த முடிவு - விறுவிறு கட்டத்தில் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்!

கைதாகும் தீபா? கடைசி நொடியில் கார்த்திக் எடுத்த முடிவு - விறுவிறு கட்டத்தில் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்!

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

கைதாகும் தீபா? கடைசி நொடியில் கார்த்திக் எடுத்த முடிவு என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கார்த்திக் தீபா கழுத்தில் தாலி கட்டியதும் நட்சத்திரா மண்டபத்துக்குள் நுழைய அனைவரும் அதிர்ச்சியடைய மணப்பெண்ணாக அமர்ந்து இருந்ததது தீபா தான் என தெரிய வந்தது. ஐஸ்வர்யா தாலியை கழட்ட சொல்ல எல்லாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஐஸ்வர்யாவும் நட்சத்திராவும் தீபாவை திட்டி கொண்டிருக்க அந்த சமயம் போலீஸ் துரையை கைது செய்து அழைத்து வர அவன் இது வரைக்கும் நான் செய்த எல்லாமே தீபா சொல்லி தான் செய்ததாக பழி போட கார்த்திக் குழப்பம் அடைகிறான்.

அதனை தொடர்ந்து கதிர் அந்த கூட்டத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்ய அருண் அதனை பார்த்து அவனை பிடித்து நிறுத்த அவனும் கொலை முயற்சி உட்பட எல்லாமே தீபா சொல்லி தான் செய்தேன் என்று சொல்கிறான். தீபாவுக்கு நட்சித்திராவை கெட்டவளாக சித்தரித்து கார்த்தியை கல்யாணம் செய்து சொத்துகளை அடைய வேண்டும் என்பது தான் அவளது ஆசை என சொல்கிறார்கள்.

அதற்கு அடுத்ததாக ஐஸ்வரியாவும் நட்சத்திராவும் போலீஸ் இருக்காங்க, அவங்க கிட்ட தீபாவை பிடித்து கொடுத்து விடலாம், தாலியை கழட்டி கொடுத்துட்டு போகட்டும் என்று சொல்ல மைதிலி முதல் முறையாக தீபாவுக்கு சப்போர்ட் செய்து பேச தொடங்க குறுக்கிடும் ராஜ ஸ்ரீ தீபா இப்படி செய்திருக்க வாய்ப்பிருக்கு என அவளும் பழியை தூக்கி போடுகிறாள்.

Also read... என் இடுப்பை அறுவை சிகிச்சை செய்தேனா? நடிகை திவ்யபாரதி பாசிட்டிவ் விளக்கம்!

தீபா எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சொல்ல ஐஸ்வர்யா அதனை நம்ம மறுக்கிறாள். போலீசில் பிடித்து கொடுத்து விடலாம் என சொல்ல கார்த்திக் இப்போ அவள் கழுத்தில தாலி கட்டி இருக்கேன், அவ என்னுடைய மனைவியாகி விட்டாள், இனிமே இது எங்க குடும்ப பிரச்சனை. போலீஸ் வரைக்கும் போனால் அது எங்களுக்கு தான் அசிங்கம், இதை நாங்களே பேசி தீர்த்து கொள்கிறோம். சிவா வந்தால் தான் உண்மை தெரிய வரும் என சொல்கிறான்.

அதோடு உடனடியாக அம்மா அபிராமியை சென்று பார்க்க வேண்டும் என முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv