முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நட்சத்திரா குறித்த உண்மைகளை உடைத்த தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

நட்சத்திரா குறித்த உண்மைகளை உடைத்த தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

நட்சத்திரா குறித்த உண்மைகளை உடைத்த தீபா, கார்த்திக் எடுத்த முடிவு என பரபரப்பான திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கார்த்திக், நட்சத்திரா மீது சந்தேகம் வந்து யோசித்துக் கொண்டிருக்க மீனாட்சி தீபாவிடம் நேரடியாக பேசி பார் என ஐடியா கொடுக்க கார்த்தி தீபாவை சந்திக்க முடிவு எடுக்கிறான்.

இந்த நேரத்தில் நட்சத்திராவின் டூப்ளிகேட் அம்மா அப்பா அபிராமி வீட்டுக்கு வந்து நாங்க எங்களுக்கு தெரிஞ்ச குருஜி ஒருவரை சந்தித்து பேசிய போது அவர் எங்களுடைய முறைப்படி கல்யாணத்தில் பெண்ணின் முகத்தை மூடித்தான் திருமணம் செய்ய வேண்டும் என சொல்லிவிட்டார். ஆகவே அப்படித்தான் நாங்கள் இந்த கல்யாணத்தை நடத்துவோம் என சொல்ல அபிராமி உங்களது விருப்பபடியே நடக்கட்டும் என சொல்கிறாள்.

இதைக் கேட்ட நட்சத்திரா அதிர்ச்சியாகி டூப்ளிகேட் அம்மா அப்பாவிடம் வருவதற்கு லேட் ஆகும்னு தானே சொன்னிங்க, இப்ப எதுக்கு திடீர்னு வந்தீங்க? என கேட்க சிவா தம்பி தான் எங்களை அனுப்பி இப்படி சொல்ல வேண்டும் இல்லையென்றால் இப்பவே போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவேன் என மிரட்டியதாக சொல்ல நட்சத்திரா சிவாவை எப்படி சமாளிப்பது என யோசிக்கிறாள்.

அதன் பிறகு கார்த்திக் தீபாவை சந்தித்து நட்சத்திரா பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களை சொல்லுங்கள் என்று கேட்க நட்சத்திரா வீட்டில் பார்ட்டி செய்த விஷயத்தை பார்த்து அபிராமியிடம் சொல்லி அபிராமி அம்மா வந்து பார்க்கும்போது அந்த இடத்தை பூஜை அறையாக மாற்றியிருந்த விஷயத்தை சொல்கிறாள்.

நட்சத்திராவிற்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம், குடிப்பழக்கம் என இரண்டும் இருக்கிறது. கதிர் நட்சத்திராவின் காதலன் என்ற விஷயத்தையும் உடைக்கிறாள். அது மட்டுமல்லாமல் நட்சத்திராவின் அப்பா அம்மா என சொல்லிக் கொண்டு வந்தவர்கள் உண்மையான பெற்றோர் கிடையாது. அவர்கள் வீட்டுக்கு வந்த போது நிறைய பொருட்களை திருடி வைத்தார்கள் அதை நான் தான் திருப்பி வீட்டுக்குள் வைத்தேன் என சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்.

அடுத்து கார்த்திக் தன்னுடைய நண்பன் போலீஸ் ஒருவரை சந்தித்து கதிர் பற்றி சொல்லி அவனை கல்யாணம் முடியும் வரை கைது செய்து ஜெயிலில் போடுமாறு சொல்ல போலீசும் கண்டிப்பாக உதவி செய்வதாக சொல்லி கிளம்புகிறார்.

Also read... சமந்தா முதல் மாளவிகா மோகனன் வரை... நீச்சல் உடையில் அசத்தும் நடிகைகள்!

அடுத்ததாக அபிராமி ராஜ ஸ்ரீ மற்றும் ரூபாஸ்ரீ-யை வீட்டுக்கு அழைத்து கார்த்தியின் கல்யாணத்தில் கச்சேரி செய்ய வேண்டும் என சொல்கிறாள். அதற்கு அடுத்ததாக ஐஸ்வர்யா மற்றும் ராஜ ஸ்ரீ என இருவரும் சந்தித்து பேசிக் கொள்கின்றனர். ஐஸ்வர்யா உங்களது மகளை கார்த்தியின் மனைவியாக்க எவ்வளவோ முயற்சி செய்தேன், ஆனால் முடியாமல் போய்விட்டது என சொல்கிறாள்.

இதைத் தொடர்ந்து சிவா தீபாவின் வீட்டுக்கு வந்து கல்யாண புடவையை கொடுத்து நாளைக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன் என சொல்லி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv