முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தீபாவின் தாலியை கழட்ட சொல்லும் ஐஸ்வர்யா.. பரபர கட்டத்தில் 'கார்த்திகை தீபம்' சீரியல்!

தீபாவின் தாலியை கழட்ட சொல்லும் ஐஸ்வர்யா.. பரபர கட்டத்தில் 'கார்த்திகை தீபம்' சீரியல்!

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

நடந்து முடிந்த கல்யாணம், தீபாவின் தாலியை கழட்ட சொல்லும் ஐஸ்வர்யா, கார்த்திக் முடிவு என்ன என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் தீபா கழுத்தில் தாலி கட்டிய நிலையில் ஐயர் நெற்றியில் குங்குமம் வைத்து விட சொல்லும் சமயத்தில் நட்சத்திரா மண்டபத்துக்குள் ஓடி வர அவளை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஐஸ்வர்யாவுக்குள் அப்போ கார்த்தியின் பக்கத்தில் மணப்பெண்ணாக உட்கார்ந்து இருப்பது யார் என்ற சந்தேகம் வர கார்த்திக் முகத்திரையை விலக்க அது தீபா என தெரிய வருகிறது. இதனால் ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைய மீனாட்சி சந்தோஷமடைகிறாள்.

ஐஸ்வர்யா என்ன பொண்ணு நீ ஏன் இப்படி பண்ண என தீபாவை திட்டிக் கொண்டிருக்க அப்போது தீபாவின் ஃபேமிலியும் மண்டபத்துக்குள் நுழைகின்றனர். தீபாவின் கழுத்தில் கார்த்திக் தாலி கட்டியிருப்பதை பார்த்து ஜானகி சந்தோஷப்பட ஐஸ்வர்யா தர்மலிங்கத்தை பார்த்து என்ன பொண்ணு பெத்து வச்சிருக்கீங்க என குடும்பத்தை அவமானப்படுத்தி பேசுகிறாள்.

தீபாவும் அவளது குடும்பத்தாரும் எங்களுக்கு எதுவும் தெரியாது எல்லாம் சிவா தம்பி தான் ஏற்பாடு பண்ணாரு, எங்களுக்கு இந்த ஊர்ல யாரையும் தெரியாது என சொல்ல ஐஸ்வர்யா அதை நம்ப மறுக்கிறாள். இந்த சமயம் பார்த்து கதிரும் தீபா தான் தன்னை கடத்தி வைத்திருந்ததாக கூட்டத்திலிருந்து எழுந்து பழி தூக்கி போடுகிறான்.

அண்ணாமலை, அருண் உட்பட எல்லோரும் இது எப்படி நடந்தது என அதிர்ச்சியுடன் இருக்க ஐஸ்வர்யா தீபாவை திட்ட மீனாட்சி தீபாவுக்கு ஆதரவாக பேசுகிறாள். ஆனாலும் கார்த்திக் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறான்.

தீபாவின் குடும்பத்தார் சிவா தான் இதற்கெல்லாம் காரணம் என சொல்ல அருணாச்சலம் சிவாவுக்கு போன் போட அவனது போன் சுவிட்ச் ஆப் என வருகிறது. ஐஸ்வர்யா சிவா ரொம்ப நல்ல மனுஷன், எங்க குடும்ப நண்பர் அவர பத்தி எப்படி தப்பா சொல்லாதீங்க என ஆவேசப்படுகிறாள்.

Also read... கோலிவுட்டில் அடுத்த சோகம்.. பருத்திவீரன் நடிகர் உயிரிழப்பு.. திரையுலகினர் இரங்கல்!

அதோடு தீபாவை கார்த்திக் கட்டிய தாலியை கழட்டி கொடுக்க சொல்ல இதைக்கேட்டு கல்யாணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எல்லோரும் எல்லாம் முறைப்படி நடந்திருக்கு, இப்போ தீபா கார்த்தியோட மனைவி அப்படி தாலியை கழட்ட சொல்றதெல்லாம் பெரிய பாவம் என சத்தம் போட ஐஸ்வர்யா என்ன செய்வது என தெரியாமல் அமைதியாகிறாள்.

கார்த்தியும் கூட்டத்தில் இருப்பவர்கள் சொல்வது எல்லாம் கேட்டு அமைதியாகவே இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv