முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பரபர காட்சிகளுடன் கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

பரபர காட்சிகளுடன் கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

சிவாவுக்கு செக் வைத்த நட்சத்திரா, தீபாவை தூக்கிய ராஜூ என பரபர காட்சிகளுடன் கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராஜூ தீபாவின் வீட்டுக்கு வந்து பார்க்க அங்கு யாரும் இல்லை என தெரிந்ததும் அந்த விஷயத்தை சிவாவுக்கு தெரியப்படுத்துகிறான்.

இதைக்கேட்ட சிவா ஒரு கோவில், மண்டபம் என எதுவும் விடாமல் எல்லா இடத்திலும் தேடு இதில் யாரோ கேம் விளையாடுறாங்க, எனக்கு தெரிஞ்சு எல்லாம் நட்சத்திராவின் வேலையாக தான் இருக்கும் என சொல்கிறான். மறுபக்கம் கல்யாண மண்டபத்தில் தீபா திருமண கெட்டப்பில் தயாராக இருக்க மாப்பிள்ளையின் டூப்ளிகேட் அப்பா ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து நடக்கும் விஷயங்களை கூறுகிறார்.

ஐஸ்வர்யாவ இன்னும் எதுக்காகவும் வெயிட் பண்ண வேண்டாம் உடனடியாக தாலி கட்ட வச்சிடுங்க என சொல்லி போனை வைக்க அவர் தர்மலிங்கத்திடம் உடனே தாலி கட்டிவிடலாம் என சொல்ல, சிவா தம்பி வரட்டும் என தர்மலிங்கம் சொல்கிறார். சிவா தம்பி வர லேட் ஆகும்னு சொன்னாரு, அதனால தாலி கட்ட சொல்லிட்டாரு என்று சொல்ல தர்மலிங்கம் மைதிலியை சிவாவுக்கு போன் போட சொல்ல போன் நாட் ரீச்சபிள் என வருகிறது.

இங்கே ஜெயிலில் இருந்து வெளியே வந்த சிவா, தர்மலிங்கத்துக்கு தொடர்ந்து போன் செய்ய அவர் கல்யாண பிசியில் போன் எடுக்காமல் இருக்கிறார். பிறகு போனை எடுத்து பார்க்கும் போது சிவாவின் போன் கால் வந்திருந்ததால் உடனே அவருக்கு போன் செய்ய சிவா கல்யாண மண்டப முகவரியை கேட்கிறான்.

இதனால் தர்மலிங்கம் பக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணிடம் போனை கொடுத்து கல்யாணம் நடக்கும் மண்டபம் முகவரியை கொடுக்கிறார். பிறகு சிவா ராஜுக்கு இந்த விஷயத்தை சொல்லி தீபாவை மட்டும் கூட்டிக்கிட்டு பியூட்டி பார்லர் வா என சொல்கிறார்.

Also read... குறட்டையை மையமாக வைத்து வெளியான 'குட் நைட்' படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்!

அதனைத் தொடர்ந்து மண்டபத்துக்கு வரும் ராஜு தீபாவை மட்டும் பியூட்டி பார்லருக்கு கூட்டி வந்து தீபாவுக்கு தெரியாமல் நட்சத்திரா போட்டோவை காட்டி இவளை போலவே ஒரு மணி நேரத்தில் மேக்கப் போட சொல்கிறான். அதன் பிறகு நட்சத்திராவுக்கு போலீஸ் ஒருவர் போன் செய்து சிவா விடுதலை ஆகிவிட்ட விஷயத்தை சொல்ல அவள் அதிர்ச்சி அடைந்து ரவுடிகளுக்கு போன் செய்து சிவாவை தீர்த்து கட்ட சொல்கிறாள்.

அதேபோல் ரவுடிகளும் சிவாவை அடித்து போட்டுவிட்டு அதை போட்டோ எடுத்து நட்சத்திராவுக்கு அனுப்ப அவள் சந்தோஷப்படுகிறாள். இந்த சமயத்தில் சிங்கு வேடத்தில் ஒருவர் கார்த்தியின் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்து நட்சத்திராவின் ரூமுக்குள் நுழைகிறார். அவளுக்கு கிப்ட் ஒன்றை கொடுத்து இந்த கல்யாணம் நடக்காது என சொல்ல நட்சத்திரா யார் நீ என கேட்க பிறகு அது சிவா என தெரிய வருகிறது. இதனால் நட்சத்திரா அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv