முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கார்த்தி கல்யாணத்தில் நடக்க போவது என்ன? - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்தி கல்யாணத்தில் நடக்க போவது என்ன? - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

சிவா போடும் திட்டம், கார்த்தி கல்யாணத்தில் நடக்க போவது என்ன என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அபிராமி வீட்டுக்கு கிளம்பி போன விசியம் நட்சத்திராவுக்கு தெரிய வர அவள் ஏன் கிளம்பி போனாங்க என ஐஸ்வர்யாவிடம் கேட்டு தெரிந்து கொள்கிறாள், மேலும் இந்த கல்யாணம் நல்ல படியாக நடந்து முடியணும், அந்த தீபாவை தோற்கடிக்கணும் என பேச இதையெல்லாம் கதிர் கேட்டு கொண்டிருக்கிறான்.

அதற்கு அடுத்ததாக கதிர் ஐஸ்வர்யா சென்ற பிறகு நட்சத்திராவிடம் என்ன இப்படியெல்லாம் பேசிட்டு இருக்க என கேட்க ஆமா, எங்கோ ஊர்ல இருந்து வந்த தீபா அழகுல கூட என்ன விட கம்மி தான், அவ எப்படி ஜெயிக்கலாம் என சொல்லி சமாளிக்க சரி சிவா வெளியே வந்து எல்லாத்தையும் மாத்திட்டா என்ன பண்ணுவ என கேட்க அப்படி எதுவும் நடக்க கூடாது என துரையுடன் சேர்ந்து திட்டம் ஒன்றை போடுகின்றனர்.

அடுத்து தர்மலிங்கம் வீட்டில் தீபா ரெடியாகி கொண்டிருக்க அவள் கழுத்துல முருகர் டாலர் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள், டாலர் எங்கே போச்சு என குழம்புகிறாள். அந்த டாலர் இருந்தது அந்த முருகரே கூட இருந்த மாதிரி இருக்கும் என வருத்தப்படுகிறாள். மறுப்பக்கம் வீட்டுக்கு வந்த அபிராமி வேலையாட்களிடம் நான் பூஜை செய்ய போறேன், யாரும் சொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்லி விட்டு பூஜையறைக்குள் செல்கிறாள்.

இங்கே தீபா வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து அனைவரையும் அழைத்து கொண்டு செல்ல தீபா வருத்தமாவே இருக்க ஜானகி அவளை சமாதானம் செய்கிறாள். எதிர் திசையில் ஜெயிலில் இருக்கும் சிவா ராஜுவிடம் முதலில் மண்டபத்தில் இருந்து நட்சத்திராவை தூக்க வேண்டும், அதன் பிறகு தீபாவை மட்டும் பியூட்டி பார்லர் அழைத்து செல்வதாக கூட்டி வந்து இந்த மண்டபத்தில் உட்கார வைக்க வேண்டும்.

Also read... குறட்டையை மையமாக வைத்து வெளியான 'குட் நைட்' படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்!

கார்த்திக் தீபா கழுத்தில் தாலி கட்டும் வரை தர்மலிங்கம் குடும்பத்திற்கு எந்த விசயமும் தெரியக் கூடாது என ஐடியா கொடுக்கிறான். இங்கே தீபாவின் குடும்பம் மண்டபத்திற்கு வந்து இறங்க வேற மண்டபமாக இருப்பதால் தர்மலிங்கம் இதுபற்றி விசாரிக்க அந்த மண்டபம் ராசி இல்லை என்பதால் சிவா தான் இங்கே மாற்றி விட்டதாக சொல்லி சமாளிக்கின்றனர்.

அதன் பிறகு ராஜு தீபாவை பியூட்டி பார்லர் அழைத்து செல்ல வீட்டுக்கு வர அவர்கள் மண்டபத்துக்கு சென்று விட்ட விசியம் தெரிய வர அவன் அந்த விசயத்தை சிவாவுக்கு தெரியப்படுத்துகிறான். இப்படியான நிலையில்  அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv