முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தீபாவால் கார்த்தியின் உயிருக்கு ஆபத்து? - ’கார்த்திகை தீபம்’ சீரியல் அப்டேட்!

தீபாவால் கார்த்தியின் உயிருக்கு ஆபத்து? - ’கார்த்திகை தீபம்’ சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

தீபாவால் கார்த்தியின் உயிருக்கு ஆபத்து? அபிராமி எடுத்த முடிவு, கார்த்திக் கொடுத்த ஷாக் என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் துளசி பூஜையில் ஐஸ்வர்யா தீபா பாத பூஜை செய்யும் போது குங்குமத்தை தட்டி விட்ட நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது ஐஸ்வர்யா குங்குமம் கொட்டுவது அபசகுனம் என கிளப்பி விட தீபா அதெல்லாம் ஒன்றும் இல்லை பதறாதீங்க என்று சொல்லி கொட்டிய குங்குமத்தை வைத்து தாமரை போல கோலமாக மாற்ற வந்தவர்கள் எல்லாரும் தீபாவை பாராட்டுகின்றனர்.

இதை தொடர்ந்து எல்லாரும் கார்த்திக்கிடம் தீபா உன்னுடன் இருக்கும் வரை நீ நல்லா இருப்ப, அவளை கண் குளிர பார்த்துக்க என்று சொல்கின்றனர். மேலும் தீபாவிடம் உன்னுடைய ஆசை என்ன என்பதை கார்த்திக்கிடம் சொல்லு, அதை அவன் கண்டிப்பா நிறைவேற்ற வேண்டும் என்று சொல்ல ஐஸ்வர்யா அபிராமிடம் இந்த வீட்டுக்கு மருமகளாகணும்னு சொன்னா என்ன செய்வீங்க என்று கொளுத்தி போட அபிராமி பதற்றம் அடைகிறாள்.

பிறகு மீனாட்சி தீபாவிடம் இதுதான் சரியான சந்தர்ப்பம், அந்த விஷயம் பற்றி கேளு என்று சொல்ல தீபா கார்த்திக்கிடம் என் வீட்ல ஒரு முருகர் சிலை இருக்கு, நான் எப்பவும் காலைல எழுந்ததும் அந்த சிலையை தான் பார்ப்பேன், எனக்காக அதை எடுத்து வந்து கொடுங்க என்று சொல்ல எல்லாரும் சந்தோசப்படுகின்றனர்.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா உறவினர்கள் கிளம்பிய பிறகு நாம எது பண்ணாலும் அது தீபாவுக்கு பாசிட்டிவாக தான் முடியுது, என்ன செய்யலாம் என யோசிக்கிறாள். பிறகு அபிராமி பூஜை செய்யும் போது ஐஸ்வர்யாவும் வந்து பூஜையில் கலந்து கொண்டு ஆரத்தி காட்டும் போது குங்குமத்தை தட்டி விட்டு அபசகுனமாக படுது என சொல்லி அபிராமியை பதற்றம் அடைய வைக்கிறாள்.

இதனை தொடர்ந்து எனக்கு தெரிந்த ஒரு ஜோசியர் இருக்கார் அவரை வர சொல்லவா என்று கேட்க அபிராமியும் சம்மதம் சொல்ல வீட்டுக்கு வந்த அவர் ஒரு பெண்ணால் இந்த வீடு ரொம்ப வேதனை பட்டுக்கிட்டு இருக்கு, அந்த பெண்ணால் கார்த்தியோட உயிருக்கு ஆபத்து, அவங்க ரெண்டு பேரும் விலகி இருப்பது தான் நல்லது என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Also read... அரசியல்வாதி மகன்தான் மாப்பிள்ளையா? மேகா ஆகாஷிற்கு திருமணம் என வைரலாகும் தகவல்!

பிறகு ஜோசியர் கிளம்பி சென்று வெளியில் காத்திருக்க அங்கு வரும் ஐஸ்வர்யா இந்த வீட்ல யார் எப்போ கூப்பிட்டாலும் இதையே சொல்லணும் என சொல்லி பணத்தை கொடுக்க இது ஐஸ்வர்யா செட்டப் என்று தெரிய வருகிறது. இறுதியாக அபிராமி கார்த்தியை கூப்பிட்டு நீயும் தீபாவும் ஒன்றாக ஒரே வீட்டில் இருப்பது நல்லது இல்லை, தீபா கெஸ்ட் ஹவுசில் இருக்கட்டும் என்று சொல்ல கார்த்திக் எனக்கு இது சரியாக படல என அம்மாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv