ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜோசியர் இந்த வீட்டில் முதலில் சண்முகத்துக்கு தான் கல்யாணம் ஆகும் என்று சொல்ல நாயகியான பரணி அறிமுகமாகிறார். அழும் குழந்தையை சமாதானம் செய்யும் பரணி ஒரு டாக்டர் என்பது பிறகு தெரிய வருகிறது.
சீப் டாக்டர் பரணியை அழைத்து டாக்டருக்கு படிக்கற எல்லாரும் 1 வருஷம் அவங்க ஊர்ல பயிற்சி எடுக்கணும், அப்படி இருக்கையில் நீங்க மட்டும் எதுக்கு உங்க சொந்த ஊரான திருச்செந்தூர் வேண்டாம் என்று சொல்றீங்க என்று கேட்க அங்க தான் என்னுடைய அப்பா இருக்காரு, அதனால் அங்க போக மாட்டேன் என சொல்கிறாள்.
அதனை தொடர்ந்து பரணியின் அப்பா சௌந்தரபாண்டி பொம்பளைங்க நைட்ல நம்பள பாத்துக்கணும், பகல்ல புள்ளைங்கள பாத்துக்கணும், அவளுக வேலை அவ்வளவு தான் என அடக்குமுறையோடு பேசுகிறார். அதோடு பஞ்சாயத்தில் ஒருவர் தங்களது மகள் ஓடி போய் விட்டதாக சொல்ல பொட்ட புள்ளைங்கள அடக்கி தான் வளக்கணும், பாசம் காட்டி வளத்தா இப்படி தான் ஓடி போவாளுக, அவ எங்க இருந்தாலும் தேடி கண்டு பிடிச்சி கொன்னுடு, மத்ததை நான் பார்த்துக்கறேன் என சொல்கிறான்.
பிறகு அவளது மனைவி பாக்கியம் பயத்துடன் ஜன்னல் வழியாக பார்க்க அவளை வெளியே அழைத்து என்ன பொம்பள புள்ளைங்க படிக்கச் கூடாதுனு சொல்றான், பொண்ணை மட்டும் படிக்க வச்சிருக்கானேனு பாக்கறயா? அது என்னுடைய கௌரவம், அதுக்காக மட்டும் தான் படிக்க வச்சேன் என சொல்கிறான். மேலும் VKS பாத்திரக்கடை ஓனர் மகனுக்கு உன்னுடைய பொண்ணை கட்டி கொடுக்கறதா வாக்கு கொடுத்து இருக்கேன், அவளை வர சொல்லு என சொல்ல பாக்கியம் எதையோ பேச வர எதிர்த்து பேசாமல் சொன்னதை மட்டும் செய் என சத்தம் போடுகிறார்.
அதன் பிறகு ஷண்முகம் வீட்டுல கந்தசஷ்டி கவசம் பாடி கொண்டே சாமி கும்மிட அப்போது தங்கைகள் ஸ்கூல், காலேஜ் செல்ல தயாராகின்றன. இசக்கி எல்லாருக்கும் தனித்தனியாக சாப்பாடு செய்து கொடுத்து ஒழுங்கா சாப்பிடணும் என அம்மாவை போல அக்கறையாக நடந்து கொள்கிறாள். ஷண்முகம் சாமி கும்மிட்டு கொண்டே வீட்டில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க அவன் தங்கைகள் ஒரே ஒரு அண்ணனை வச்சிட்டு நாங்க படுற பாடு இருக்கே என புலம்புகின்றனர்.
அடுத்து செந்தில் பூஜையறையில் 4 தங்கைகளுக்கு நான்கு உண்டியல் தனக்கு ஒரு உண்டியல் என தனித்தனியாக வைத்திருக்க நான்கு உண்டியலில் பணத்தை போட்டு விட்டு ஐந்தாவதாக தன்னுடைய உண்டியலில் பணத்தை போடும் போது மனம் மாறி அதையும் தனது தங்கைகளின் உண்டியலிலேயே போடுகிறான்.
அதற்கு அடுத்து ஒவ்வொரு தங்கையாக அழைத்து சென்று டிராப் செய்து விட்டு பசங்க கூட பேச கூடாது என சொல்ல அவர்களும் பதில் கொடுத்து அனுப்புகின்றனர். கடைசியாக ரத்னாவுக்கு யாரோ ஒருவர் லவ் லெட்டர் கொடுத்ததாக தெரிய வர ஷண்முகம் பயங்கர கோபத்துடன் சண்டையிட செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv