முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பரணியிடம் ஷண்முகத்துக்கு மலர்ந்த காதல் - அண்ணா சீரியல் அப்டேட்!

பரணியிடம் ஷண்முகத்துக்கு மலர்ந்த காதல் - அண்ணா சீரியல் அப்டேட்!

அண்ணா சீரியல்

அண்ணா சீரியல்

ஷண்முகத்துக்கு மலர்ந்த காதல், காரில் வந்து மோதிய பரணி என அண்ணா சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அண்ணா. நேற்றைய எபிசோடில் ரத்னாவிடம் ஒருவன் லவ் லெட்டர் கொடுத்ததை தெரிந்து சண்முகம் கோபத்தோடு அங்கு சென்று அவனிடம் அண்ணன் தங்கச்சினா என்னன்னு தெரியுமா? என திரும்பவும் நீளமாக டயலாக் பேசுகிறான். கடைசியில் லவ் லெட்டர் கொடுத்தது ஒரு எல்கேஜி பையன் என்ற விஷயம் தெரிய வருகிறது.

இதனையடுத்து சண்முகம் கடையில் இருக்கும் போது ப்ரோக்கர் ரத்னாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு, அவங்க ஓகே சொல்லிட்டாங்க என்று சொல்ல செந்தில் சந்தோஷப்படுகிறான். மேலும் நம்ம குடும்பத்தில் நடந்த விஷயத்தை பற்றி சொல்லிட்டீங்களா எனவும் கேள்வி கேட்கிறான்.

அதோட வெட்டுக்கிளியிடம் முருகனுக்கு ஒரு தேங்காய் எடுடா என சொல்ல அவன் பெரிய தேங்காயை எடுத்து கொடுக்க நம்ம முருகனுக்கு தானே, இவ்வளவு பெருசு எதுக்கு? இதோட விலை என்ன தெரியுமா என்று திட்டி இருப்பதிலேயே சிறிய தேங்காய் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு செல்கிறான்.

அங்கே கோவிலில் பாக்கியமும் அவளது இரண்டாவது மகனும் வந்திருக்க சண்முகம் தேங்காய் உடைக்க போகும் போது அவர்கள் பார்த்து என்ன விஷயம் என கேட்க ரத்னாவுக்கு நல்ல இடம் ஒன்னு வந்திருப்பதாக சொல்கிறான். மேலும் நீங்க எதற்கு தேங்காய் உடைக்க வந்தீங்க என கேட்க பரணி ஊரிலிருந்து வருவதாக சொல்ல சண்முகம் சந்தோஷப்படுகிறான்.

பிறகு சண்முகமும் வெட்டுக்கிளியும் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது வெட்டுக்கிளி உனக்கு தான் முதல்ல கல்யாணம் நடக்கும் போல, அண்ணி வேற ஊருக்கு வராங்க என சொல்ல சண்முகம் அதை ஏற்கவும் முடியாமல் இல்லை என்று சொல்லவும் முடியாமல் தவிக்கிறான்.

மேலும் கடவுள் அண்ணி உனக்கு தானு எழுதி வச்சிருந்தா அவங்க நேரா வந்து உன் பைக் மேல மோதுவாங்க என சொல்ல அதற்கு ஏற்றார் போல பரணி காரில் வந்து சண்முகம் பைக்கின் மீது மோத சண்முகம் கீழே விழுகிறான். அவனுக்கு கையில் லேசான காயம் ஏற்படுகிறது.

Also read... ”பராசக்தி சிவாஜிக்குப் பிறகு பருத்திவீரன் கார்த்திதான்” - ’வந்தியத்தேவனுக்கு ஹேப்பி பர்த்டே..!

காரில் இருந்து இறங்கிய பரணி ஏய் சண்முகம் என சொல்லி கை கொடுத்து அவனைத் தூக்கி அவனுக்கு முதலுதவி செய்கிறாள். அந்த நேரம் பார்த்து கார் ரிப்பேர் ஆகிவிட பரணி அவசரமாக போக வேண்டும் என்று சொல்ல வெட்டுக்கிளி அதான் அண்ணனோட வண்டி இருக்கே.. அதுல போங்க என சொல்கிறான்.

பிறகு பரணி சண்முகத்துடன் வண்டியில் உட்கார்ந்து கொண்டு கிளம்ப சண்முகம் காதல் பரவசத்துடன் வண்டியை ஓட்டி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv