ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அண்ணா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, நேற்றைய எபிசோடில் சண்முகம் ரவுடிகளை பேசி ஓட விட்டதை நினைத்து அவனது தங்கச்சிங்க நான்கு பேரும் சிரித்து கொண்டிருக்கின்றனர்.
அதற்கு அடுத்ததாக ஷண்முகம் கடை காட்டப்படுகிறது. எக்ஸ்ட்ரா காசும் வாங்க மாட்டான், வாங்குன காசுக்கு கம்மியா பொருளும் கொடுக்க மாட்டான் என்பது நடத்தையின் மூலம் தெரிய வருகிறது. அதன் பிறகு கடைக்கு வெள்ளை சட்டையுடன் வரும் ஒருவர் இன்னைக்கு செவ்வாய்க்கிழமை என சொல்ல சண்முகம் வேகவேகமாக கிளம்பி சர்ச்சுக்கு வருகிறார்.
எல்லா சாமிகளையும் கும்பிடும் சண்முகம் ஒவ்வொரு வாரமும் சர்ச்சுக்கு வந்து தன்னுடைய தங்கைகளுக்காக வேண்டிக்கொள்வது வழக்கம் என தெரிய வருகிறது. பின்னாடியே வெட்டுக்கிளியும் சர்ச்சுக்கு கிளம்பி வருகிறான்.
சண்முகம் தன்னுடைய முதல் தங்கச்சி ரத்னாவுக்காக முதல் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அவளுக்கு ஒரு சின்ன ஸ்கூல் வாத்தியாரை கட்டிக்கிட்டு பசங்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்துக்கிட்டே வாழனும் என்பதுதான் ஆசை அவளுக்கேத்த மாதிரி மாப்பிள்ளை அமைய வேண்டும் என வேண்டுகிறார்.
ஆனால் ரத்னாவுக்கு ஒரு ஸ்கூலுக்கு கரஸ்பாண்டாக மாறி ஏழை எளிய குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியை கொடுக்க வேண்டும் என்பதுதான் ஆசை என்பது வெட்டுக்கிளி மூலம் தெரிய வருகிறது.
பிறகு சண்முகம் வீரலட்சுமிக்காக இரண்டாவது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அவள் ரொம்ப அமைதியானவ, அவள மாதிரியே அமைதியான மாப்பிள்ளை கிடைக்கணும் என வேண்ட உண்மையில் வீரலட்சுமிக்கு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை என்பது தெரிய வருகிறது.
மூன்றாவதாக இசக்கி அம்மாளுக்காக மெழுகுவர்த்தி ஏற்றும் சண்முகம் அவளுக்கு நல்ல சமையல் செஞ்சு எல்லாரையும் நல்ல விதமா பாத்துக்கணும் என்பதுதான் ஆசை, படிப்பறிவில்லாத அவளை நல்லா புரிஞ்சு நடத்துகிற மாப்பிள்ளை வேண்டும் என வேண்ட உண்மையில் இசக்கிக்கு ஒரு பிசினஸ் செய்து சம்பாதிக்க வேண்டும் படிப்பில்லை பணமிருந்தால் தான் மதிப்பாங்க என்ற கனவோடு இருப்பது தெரிய வருகிறது.
கடைசியாக செல்லக்கனிக்கு படிப்புனா ரொம்ப பிடிக்கும் அவளுக்கு ஏத்த மாதிரி படிச்ச மாப்பிள்ளை அமையனும் என வேண்ட உண்மையில் செல்லக்கனிக்கு பாட்டு பாடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வென்று சித்ரா அம்மா மாதிரி ஒரு பெரிய பாடகியாகணும் என்ற ஆசை குறித்து தெரிய வருகிறது.
Also read... ’சிகரெட் அட்வைஸ்.. அண்ணாமலை டயலாக்..’ சரத்பாபு குறித்து உருக்கமாக பேசிய ரஜினிகாந்த்!
இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் சண்முகம் ஜோசியர் ஒருவரை அழைத்து வந்து நான்கு தங்கைகளின் ஜாதகத்தை எடுத்துக் கொடுத்து கல்யாணம் பற்றி கேட்க அவர் இந்த வீட்டில் முதலில் உனக்குத் தான் கல்யாணம் நடக்கும், கட்டம் அதுதான் சொல்லுது என சொல்ல சண்முகம் ஜோசியரை நான் உங்க இடத்துக்கு வந்து பார்க்கிறேன் என அனுப்பி வைக்கிறார்.
வீரலட்சுமி, செல்லக்கனி ஆகியோர் அண்ணாவுக்கு தான் முதல்ல கல்யாணம் என நக்கல் அடித்து பேச ரத்னா இந்த ஜென்மத்துல அண்ணா நமக்கு கல்யாணம் பண்ணாம அது கல்யாணம் பண்ணிக்காது என்று சொல்கிறாள். மற்ற தங்கைகள் அண்ணா வயசுல இருக்கவங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு என சொல்ல அப்படியே ஹீரோயின் பரணி ( நித்யா ராம் ) அழுது கொண்டிருக்கும் குழந்தையை சமாதானம் செய்வது போல என்ட்ரி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv